பேட்டரி ட்ராக்டர்
10 மணி நேரம் இயங்கும் பேட்டரி ட்ராக்டர்
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவரும் சூழலில், அதை சமாளிக்கும் விதமாக குஜராத்தின் ஜாம்நகரைச் சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் பேட்டரியில் இயங்கும் ட்ராக்டர் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டம் காலாவாட் தாலுக்காவில் உள்ள பிப்பர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மகேஷ்பாய் பூத். 34 வயதான மகேஷ்பாய்யின் தந்தையும் கேசுபாய் பூத் என்பவரும் ஒரு விவசாயி. மகேஷ் வணிக பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்று, பின்னர் அரசின் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் கொண்ட இ-ரிக்ஷா கோர்ஸில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
இந்நிலையில், நாடு முழுவதும் எரிபொருள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில்,விவசாயிகள் ட்ராக்டரை டீசல் கொண்டு இயக்க அதிக செலவு பிடிக்கிறது. இதற்கு நீண்ட கால தீர்வை எட்ட வேண்டும் என்ற நோக்கில், மகேஷ் 22 ஹெச்பி திறன் கொண்ட பேட்டரி ட்ராக்ட்டரை வடிவமைத்துள்ளார்.
இதில் 72 வாட் லித்தியம் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதற்கு 'வ்யோம்'(Vyom) என பெயரிட்டுள்ளார். இந்த ட்ராக்டரில் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்டரி நல்ல தரமுள்ளதாக இருப்பதால், அதை அடிக்கடி மாற்ற வேண்டிய தேவை இல்லை. இந்த பேட்டரியானது நான்கு மணிநேரத்திலேயே சார்ஜ் ஆகும். முழு சார்ஜ் ஆனப் பின்னர் 10 மணிநேரம் தொடர்ந்து இயங்கும் திறன் கொண்டுள்ளது.
இந்த அதிநவீன ட்ராக்டரில் மகேஷ் லேடஸ்ட் தொழில்நுட்பங்கள் பலவற்றையும் இணைத்துள்ளார். இந்த டாரக்டரை மொபைல் போனுடன் இணைத்து அதன் வேகம் உள்ளிட்டவற்றை கன்ட்ரோல் செய்துகொள்ளலாம்.
மேலும், தற்போது உலக அளவில் கால நிலை மாற்றம் பிரச்னை உருவெடுத்துள்ள நிலையில், இந்த சிறப்பு பேட்டரி ட்ராக்டரால் புவி வெப்பம், மாசு போன்ற பிரச்னைகள் ஏற்படாது. அத்துடன் இந்த ட்ராக்டரை இயக்க நீரின் தேவை ஏதும் இருக்காது என்கிறார் மகேஷ்.
COMMENTS