புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நெருங்கி கொண்டு இருக்கிறது.
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நெருங்கி கொண்டு இருக்கிறது. இந்த புதுச்சேரி வெற்றி அரசியல் ரீதியாக தென்னகத்திலும், தமிழகத்திலும் பாஜகவிற்கு பலத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியை பிடித்து.. காவி கொடியை இந்தியா முழுக்க ஏற்ற வேண்டும் என்பதே பாஜகவின் ஒரே குறிக்கோள். இதை மனதில் வைத்தே ஒவ்வொரு மாநிலங்களிலும் பாஜக தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வருகிறது. பாஜகவின் கடந்த 6-7 ஆண்டு அரசியல் திட்டங்கள், தேர்தல் செயல்பாடுகள் எல்லாமே இந்த விஷயத்தை மனதில் வைத்தே அமைந்து இருந்தது. தற்போது புதுச்சேரி சட்டசபை தேர்தலும் பாஜகவின் இந்த திட்டத்தில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி புதுச்சேரி மிக சிறிய யூனியன் பிரதேசம், இந்திய வரைபடத்தில் சிறிய புள்ளி.. இங்கு பாஜக வெற்றிபெறுவது எப்படி பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஆனால் புதுச்சேரியில் வெற்றிபெறுவதன் மூலம், எதிர்காலத்தில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கலாம் என்ற நம்பிக்கையில் பாஜக இருக்கிறது. புதுச்சேரியில் மொத்தம் 30 தொகுதிகளில் என். ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. எத்தனை இடங்கள் இங்கு தற்போது திமுக - காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற இன்னும் 5 இடங்கள் மட்டுமே தேவை. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் இதுவரை இல்லாத மிகப்பெரிய அரசியல் மாற்றம் இந்த முறை நடந்து கொண்டு இருக்கிறது. அங்கு என். ஆர் காங்கிரசின் ரங்கசாமி முதல்வராக வந்தாலும் கூட பாஜகவிற்கு அரசியல் ரீதியாக இது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி தமிழகத்தில் தாமரை மலராது.. பாஜக எல்லாம் வெற்றியே பெறாது என்ற கருத்து நிலவி வருகிறது. இது ஒரு வகையில் உண்மையும் கூட. அந்த கருத்தை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்க புதுச்சேரியை பாஜக கையில் எடுத்துள்ளது.
புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தால் அருகில் இருக்கும் தமிழகத்தில் 2026ல் ஆட்சியை பிடிக்க முடியும் என்று பாஜக நினைக்கிறது. பாஜக திட்டம் பாஜகவின் திட்டம் மிக எளிதானது.. புதுச்சேரியில் ஆட்சியை பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக கடலூர் அருகில் இருக்கும் சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, பண்ருட்டி, கும்பகோணம் என்று தமிழகத்தில் வலுவாக கால் பாதிக்கலாம் என்று பாஜக நினைக்கிறது. தமிழர்கள் இருக்கும் புதுச்சேரியை பிடித்தால் தமிழகத்தையும் பிடிக்க முடியும் என்று பாஜக நம்புகிறது. பீகார் இதற்கு சிறந்த உதாரணம் மேற்கு வங்கம் தான். கடந்த சட்டசபை தேர்தலில் மேற்கு வங்கத்தில் இரட்டை இலக்கத்தில் கூட வெற்றிபெறாத பாஜக இந்த முறை கிட்டத்தட்ட 95 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக பல வடகிழக்கு மாநிலங்களில் பாஜக ஆட்சிக்கு வந்ததும், அருகில் இருக்கும் பீகார், உ.பியில் பாஜக வலுவாக இருப்பதும்தான். வலிமை ஒரு மாநிலத்தில் வெற்றிபெறுவதன் மூலம் அதற்கு அருகில் உள்ள அண்டை மாநிலங்களிலும் பாஜக தனது வலிமையை விஸ்தரிக்கிறது.
பீகார் வாக்காளர்கள் மேற்கு வங்க தேர்தலில் இந்த முறை ஆதிக்கம் செலுத்தியது போலவே எதிர்காலத்தில் புதுச்சேரியை வைத்து தமிழகத்தில் வளர முடியும் என்று பாஜக நினைக்கிறது. அதில் முதல் வெற்றியாக பாஜகவின் புதுச்சேரி எழுச்சி பார்க்கப்படுகிறது. எழுச்சி அதோடு புதுச்சேரிக்கு புதிய நலத்திட்டங்களை கொண்டு வருவதன் மூலம் வரும் நாட்களில் தமிழகத்தை கவர முடியும், தமிழர்கள் மத்தியில் பாஜகவின் இமேஜை மாற்ற முடியும் என்று அக்கட்சியின் தேசிய தலைமை நினைக்கிறது. ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து, பின் மொத்தமாக பெரிய அடி எடுத்து வைப்பதே பாஜக ஸ்டைல். இப்போது புதுச்சேரியில் பாஜக எடுத்து வைத்து இருப்பது முதல் அடி. பாஜக சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக டெல்டாவிற்கு செல்லவும் பிரைவேட் பஸ் போலத்தான் தற்போது பாஜகவும் புதுச்சேரி வழியாக தமிழகத்திற்கள் நுழைய பார்க்கிறது. இனி வரும் நாட்களில் புதுச்சேரியில் பாஜக செய்யும் அரசியல் கண்டிப்பாக தமிழகத்தில் பாதிப்புகளை ஏற்படுகிறது. புதுச்சேரியில் பாஜக கொண்டு வரும் திட்டங்கள் (பீப் தடை தொடங்கி - மும்மொழி கொள்கை வரை) பல விஷயங்கள் தமிழக அரசியலில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். வெற்றி தமிழகத்தில் அதிமுகவை அப்புறப்படுத்திவிட்டு இரண்டாவது பெரிய கட்சியாக வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. இதை புதுச்சேரியில் இப்போதே பாஜக சாதிக்க தொடங்கிவிட்டது. விரைவில் தமிழகத்திலும் பாஜக இந்த முயற்சியை மேற்கொள்ளும். மேற்கு வங்கத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக மாறியது போல இங்கும் பாஜக வளர்ச்சி பெற திட்டமிடும்.. அதற்கான முதல் அடிதான் இந்த புதுச்சேரி எழுச்சி.. பாஜகவின் அடுத்த டார்கெட் தமிழ்நாடு 2026 ஆகவே இருக்கும்!
COMMENTS