தமிழகத்தில் கொரோனா பரவல் அதிவேகமாக உச்சமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
சென்னை: திரையரங்குகள், வணிக வளாகங்கள், பெரிய கடைகள் ஆகியவற்றை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தமிழக அரசும் அறிவித்திருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிவேகமாக உச்சமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் திரையரங்குகள், வணிக வளாகனங்கள், பெரிய கடைகள் மூடப்படும் என்பது உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது அதன் விவரம் வருமாறு:-
* பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை!
* மாநகராட்சிகள், நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை
* திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள் இயங்க அனுமதியில்லை
* புதுச்சேரி தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ-பதிவு கட்டாயம்
* கோல்ப், டென்னிஸ் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு சங்கங்கள் செயல்பட அனுமதி இல்லை
* சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளுக்கு மட்டும் அனுமதி
* திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது
* இறுதி ஊர்வலம், சடங்குகளில் 25 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை
* உணவகங்கள், டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி - அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை
* அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
* உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு மட்டும் நடத்த அனுமதி
* மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் வழக்கம்போல் இயங்க அனுமதி
COMMENTS