சென்னை: நாளை மறுநாள் அதாவது, ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு முதல், தமிழகத்தின் சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்...
சென்னை: நாளை மறுநாள் அதாவது, ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு முதல், தமிழகத்தின் சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் சில பகுதிகளில் ஆங்காங்கே இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகம் அதனையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மிதமானது முதல் கனமானது வரையிலான மழையாக இருக்கும். எந்த மாவட்டங்கள் அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் முதல் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள் மட்டுமில்லாமல் வட உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும். எந்தெந்த நாட்களில் எங்கு மழை நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் 15ம் தேதி கனமழை பெய்யும். 16ம் தேதி, நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் இடி, மின்னல், காற்றுடன் (30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ) கூடிய கன மழை பெய்யக்கூடும். சென்னை நிலவரம் சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு சென்னை வானிலை மைய அதிகாரி புவியரசன் தெரிவித்தார்.
COMMENTS