டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோராவின் பதவிக் காலம் நேற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்க...
டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோராவின் பதவிக் காலம் நேற்று முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சுஷில் சந்திரா இன்று பதவியேற்கிறார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையராகக் கடந்த இரண்டு ஆண்டுகள் இருந்தவர் சுனில் அரோரா. இவரது பதவிக்காலம் நேற்று முடிவடைந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் ஐந்து மாநில தேர்தல் தொடர்பான அறிவிப்பின்போதே, இது தொடர்பாகக் குறிப்பிட்ட சுனில் அரோரா, புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் தான் ஓய்வு பெற்றதும் பதவியேற்பார் என்ற தெரிவித்திருந்தார். சுனில் அரோராவைத் தொடர்ந்து புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா ஐஆர்எஸ் நியமிக்கப்பட்டார். அவர் இன்று பதவியேற்கவுள்ளார். தேர்தல் நடைபெற்று வரும் மேற்கு வங்கத்தில் தற்போது மிகவும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பொறுப்பேற்கிறார்.
இவர் 2022ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி வரை தலைமைத் தேர்தல் ஆணையராக இருப்பார் என மைஸ் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநில தேர்தல்கள் இவர் தலைமையில் நடைபெறவுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்கும் சுஷில் சந்திரா 1980ஆம் ஆண்டு பேட்ஜ் வருவாய் துறை அதிகாரி ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 15 2019இல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்கவுள்ளார். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கடந்த சில காலமாகவே மிகக் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இவரது செயல்பாடுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படும்.
COMMENTS