நடிகர் விவேக்
விவேக் (19 நவம்பர் 1961 - 17 ஏப்ரல் 2021) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 1961 நவம்பர் 19ஆம் நாளில் அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மகனாக கோவில்பட்டியில் பிறந்தார். இவரது சொந்த ஊர் கோயில்பட்டி - இலுப்பை ஊரணி. இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பிரபலபடுத்தியது.
இந்திய அரசு வழங்கும் 2009ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார்.
நடிகர் விவேக் ஏப்ரல் 17ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு காலை 4:35 மணிக்கு காலமானார். இன்று மாலை 5 மணிக்கு உடல் அடக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
விருதுகள்
விஜய் விருதுகள்
அனைத்து நேர விருப்பமான நகைச்சுவை நடிகர் விருது.
பிலிம்பேர் விருதுகள்
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் – தமிழ் – ரன் (2002)
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருதுகள் – தமிழ் – சாமி (2003)
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் – பேரழகன் (2004)
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் – சிவாஜி (2007)
தமிழக அரசு விருதுகள்
சிறந்த நகைச்சுவை நடிகர் விருது– உன்னருகே நான்னிருந்தால்
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது – ரன் (2002)
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது – பார்த்திபன் கனவு (2003)
சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது – சிவாஜி (2007)
மற்ற விருதுகள்
சிறந்த நகைச்சுவை நடிகர் – தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்
சிறந்த நகைச்சுவை நடிகர் – பலவகை திரைப்பட விருதுகள்
சிறப்பு சான்றாயர் விருது - ஏசியாநெட் திரைப்பட விருதுகள்
சிறந்த ஆண் நகைச்சுவை விருது - எடிசன் விருதுகள்
சிறப்பு நகைச்சுவை விருது – கொடைக்கானல்
பண்பலை வானொலி விருதுகள்
சிறந்த நகைச்சுவை நடிகர் விருது – ஜ.டி.எஃப்.ஏ (ITFA)
நன்மதிப்பு
பத்மசிறீ விருது – இந்திய அரசு விருது விழா
COMMENTS