Ration card changes (suger to rice)today last date.
பொது விநியோகத் திட்டத்தின்கீழ் சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர், அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று சர்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்திட முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன் அடிப்படையில், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்ய விரும்பினால் ஆன்லைன் அல்லது வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இது போல ஏராளமானோர் சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக்கொண்டனர். இதன் மூலம் அரசின் பல சலுகைகள், பொங்கல் பரிசுத் தொகையை பெற்றனர்.
இந்த ஆண்டும் சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று அரசு அவகாசம் அளித்தது. இது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வெளியிட்ட அறிவிப்பில், 'சர்க்கரை குடும்ப அட்டையை வைத்திருப்பவர்கள் தகுதி அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம். அதற்கான விண்ணப்பங்களை குடும்ப அட்டையின் நகலை இணைத்து டிசம்பர் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.
tnpds.gov.in என்ற இணையத்தளத்திலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பம் பெறப்பட்டதும் உடனடியாக பரிசீலித்து சர்க்கரை குடும்ப அட்டைகள், அரிசி அட்டைகளாக மாற்றப்படும்.
அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பொது விநியோகத் திட்டத்தில் தற்பொழுது 5,80,298 குடும்ப அட்டைகள் சர்க்கரை குடும்ப அட்டைகளாக உள்ளன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ஒருநாள் மட்டுமே உள்ளதால் உடனடியாக சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி அட்டை வைத்துள்ள 2 கோடியே 6 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். சர்க்கரை அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு கிடைக்காது எனவே உடனடியாக உங்கள் அட்டைகளை அரிசி அட்டைகளாக ஆன்லைனில் மாற்றிக்கொள்ளுங்கள்.
COMMENTS