பெண்களின் மரியாதைக்கும், கண்ணியத்துக்கும் அனைவரும் ஆதரவாய் நிற்க வேண்டும்.குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ரக்ஷா பந்தன் வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.
பெண்களின் மரியாதைக்கும், கண்ணியத்துக்கும் அனைவரும் ஆதரவாய் நிற்க வேண்டும். இதனால் அவர்கள் நாட்டுக்கும், சமூகத்துக்கும் தங்கள் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும் என்று நமது நாட்டின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ரக்ஷா பந்தன் வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.
சகோதர பந்தத்தை எடுத்துக்கூறும் இந்த ரக்ஷா பந்தன் தினம் இந்துக்களின் பண்டிகை என்பதைத் தாண்டி பாசத்தைக் காட்டும் ஒரு சமூக விழாவாகவே இருந்து வருகிறது. ரக்ஷா பந்தன் என்றால் 'பாதுகாப்பு பிணைப்பு' என்றும், பாதுகாப்பு பந்தம் என்றும் பொருள்.
இந்த நாளில் ஓர் ஆண் தனது கையில் ரக்ஷா கயிறைக் கட்டிக் கொள்வது என்பது, அவருக்குக் கயிறு கட்டிய அந்தப் பெண்ணை சகோதரியாக பாவித்து அவளின் வாழ்க்கை முழுவதுமான பாதுகாப்பிற்கும், நலத்துக்கும் என்றென்றும் காவலாக இருப்பேன் என்று உறுதி கூறுவதைப் போன்றதாகும். வட இந்தியாவில் மட்டுமின்றி தென்இந்தியாவிலும் இப்போது பிரபலம் அடைந்துவரும் இந்த பண்டிகையையொட்டி நமது நாட்டின் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்து செய்தியில், "பெண்களின் மரியாதைக்கும், கண்ணியத்துக்கும் அனைவரும் ஆதரவாய் நிற்க வேண்டும். இதனால் அவர்கள் நாட்டுக்கும், சமூகத்துக்கும் தங்கள் சிறந்த பங்களிப்பை வழங்க முடியும்" என கூறி உள்ளார்.
துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், "இந்த பண்டிகை அன்பு மற்றும் பாசத்தினால் சகோதர, சகோதரிகளை ஒன்றிணைக்க மீண்டும் உறுதிப்படுத்துகிறது" என தெரிவித்துள்ளார்.
(raksha-bandhan-2020)ரக்ஷா பந்தன் திருவிழா இந்து பண்டிகை என்றாலும் கூட, இது மதங்களையும் தாண்டிய நேசத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்த்தெடுப்பதால் தற்போது அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று ரக்ஷா பந்தனை முன்னிட்டு பல வீடுகளில் சகோதரர்களுக்கு சகோதரிகள் ஆரத்தி எடுத்து பொட்டு வைத்து ராக்கி கயிறு கட்டி வாழ்த்துக்களை பரிமாறினர். கயிறு கட்டிய சகோதரிகளுக்கு சிலர் பரிசுகளை கொடுத்து வாழ்த்தினர். திருமணம்,
கல்வி, வேலை காரணமாக வெவ்வேறு ஊர்களில் பிரிந்திருந்தாலும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பலரும் சந்திக்க முடியாமல் போனாலும் இந்த நாளில் சகோதர சகோதரிகளை பாசத்துடன் நினைவுகூர்ந்து மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்வோம்.
COMMENTS