கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிக்சல் 4 இன் டோன்-டவுன் பதிப்பாக மாற்றியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730G சிப்செட் உடன் இயக்கப்படுகிறது
கூகிள் நிறுவனம் தனது பட்ஜெட் விலை கூகிள் பிக்சல் 4a சாதனத்தின் அறிமுகத்திற்காக அனைவரும் காத்திருந்தனர். நேற்று வரை, சாதனத்தைச் சுற்றியுள்ள ஒரு டன் வதந்திகள், சந்தை மற்றும் இணையத்தில் பரவி வந்தது. ஒருவழியாகக் கூகிள் இறுதியாகத் தனது கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திவிட்டது.
கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பிக்சல் 4 இன் டோன்-டவுன் பதிப்பாக மாற்றியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730G சிப்செட் உடன் இயக்கப்படுகிறது. கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போனில் பின்புறம் மற்றும் முன்புறத்தில் சிங்கள் கேமரா அமைப்புடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு முதன்மை சாதனம் இல்லையென்றாலும், பின்புறத்தில் உள்ள சிங்கள் கேமரா ஒரு இடைப்பட்ட ஸ்மார்ட்போனிலிருந்து மிகவும் எதிர்பாராதது.
ஆனால், கூகிள் ஸ்மார்ட்போனில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் கூகிள் நிறுவனத்தில் கேமரா செயல்திறன் என்பது சிறந்த அமைப்புடன் வருகிறது. சிங்கள் கேமரா அமைப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போனின் செயல் திறன் மற்ற பிளாக்ஷிப் போன்களுக்கு நிகராக உள்ளது என்பதில் சந்தேகமில்லை.
கூகிள் பிக்சல் 4a சிறப்பம்சங்கள்:
- 5.81' இன்ச் முழு எச்.டி பிளஸ் கொண்ட 1080 X 2340 பிக்சல்கள் உடைய ஓல்இடி டிஸ்பிளே
- எச்டிஆர் ஆதரவுடன்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G சிப்செட்
- 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் 128 ஸ்டோரேஜ்
- அண்ட்ராய்டு 10 இயங்குதளம்
- 12MP பின்புற கேமரா மற்றும் எல்.ஈ.டி ஃப்ளாஷ் 8MP முன்பாக செல்ஃபி கேமரா
- 3.5 மிமீ ஆடியோ ஜாக்
- 18W ஃபாஸ்ட் சார்ஜிங் 3140 எம்ஏஎச் பேட்டரி
கூகிள் பிக்சல் 4a தற்பொழுது $ 349 டாலர் என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் தோராயமாக ரூ.26,300 என்ற விலையில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கூகிள் பிக்சல் 4a ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 128 ஜிபி கொண்ட ஒரே வேரியண்ட் மாடலாக மட்டுமே வருகிறது. தற்போது அமெரிக்காவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அக்டோபர் மாதத்திற்குள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
COMMENTS