கொரோனா காலத்தில் விட்டதை குறுகிய காலத்தில் பிடிக்க வேண்டும் என்பதற்காக டாடா நிறுவனம் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. இந்திய ஆட்டோமொபைல...
கொரோனா காலத்தில் விட்டதை குறுகிய காலத்தில் பிடிக்க வேண்டும் என்பதற்காக டாடா நிறுவனம் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்திய ஆட்டோமொபைல்ஸ்துறை அதன் வரலாற்றிலேயே இல்லாத வகையிலான விற்பனை வீழ்ச்சியை தற்போது சந்தித்து வருகின்றது. வாகனத்துறையின் இந்த இக்கட்டான நிலைக்கு கொரோனா வைரஸ் மட்டுமே காரணமாக அமைந்துள்ளது. இதனால் நீடித்து வரும் இழப்புகள் ஏராளாம்.
எனவேதான், இந்த வைரசை ஒழித்து கட்டுவதற்கான பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேசமயம், வைரசால் ஏற்பட்ட இழப்புகளை மீட்டெடுக்கம் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வரகின்றன. அந்தவகையில், வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்கள் கடந்த காலங்களில் இழந்தவற்றை மிகக் குறுகிய காலத்தில் பெற வேண்டும் என்பதில் அதி தீவிரம் காட்டி வருகின்றது.
அம்மாதிரியான ஓர் செயலில்தான் இந்திய ஆட்டோ மொபைல்துறையின் மிகப் பெரிய ஜாம்பவான் நிறவனம் என்று போற்றப்படும் டாடா களமிறங்கியிருக்கின்றது.
இதனடிப்படையில், வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்க்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை அது அறிவித்துள்ளது.
பூஜ்ஜியம் டவுண்பேமென்ட், ஆறு மாதங்களுக்கு இஎம்ஐ விலக்கு உள்ளிட்ட சிறப்பு சலுகைகளை அது அறிவித்துள்ளது. ஆனால், இந்த சிறப்பு திட்டத்தின் மூலம் டாடாவின் குறிப்பிட்ட சில மாடல்களை மட்டுமே வாங்க முடியும். டியாகோ, நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய மாடல்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.
இந்த மூன்று மாடல்களும் அதிக பாதுகாப்பு நிறைந்த கார்கள் ஆகும். இவை, பாதுகாப்பு ரேட்டிங்கில் நான்கு நட்சத்திரங்களுக்கு குறைவில்லாமல் ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றன. அதிலும், டாடா நெக்ஸான் இந்தியாவின் முதல் அதிக பாதுகாப்பு நிறைந்த கார் என்ற பெருமையைப் பெற்ற மாடல் ஆகும். இந்த சிறப்பு வாய்ந்த கார்களுக்குதான் டாடா நிறுவனம் சிறப்பு கடன் திட்டத்தை அறிவித்துள்ளது.
ஒரு ரூபாய் கூட முன் பணம் இல்லாமலும், ஆறு மாதங்களுக்கு இஎம்ஐ கட்ட வேண்டும் என்ற அச்சம் இல்லாமலும் கார்களை வாங்கும் திட்டம்தான் அது.
எனவே, டாடாவின் நெக்ஸான், டியாகோ மற்றும் அல்ட்ராஸ் ஆகிய கார்களை வாங்கிய பின்னர் ஆறு மாதங்கள் கழித்தே இஎம்ஐ கட்ட வேண்டும் என்ற சூழல் உருவாகியுள்ளது.
அதேசமயம், இந்த இடைவெளிக்கான (ஆறு மாதங்கள்) வட்டி தொகையை மட்டும் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதை எப்போது செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், பூஜ்ஜியம் டவுண்பேமென்ட் மற்றும் ஆறு மாத இஎம்ஐ விளக்கு மக்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளது.
இது எந்தளவிற்கு டாடாவிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையை கையாளும் விதமாக இந்த சிறப்பு சலுகைகளை டாடா அறிவித்தள்ளது.
இந்த வைரசின் காரணமாக டாடா நிறுவனம் மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்தது. தற்போதும் சந்தித்து வருகின்றது. எனவே சிறப்புத் திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்களைக் கவரும் முயற்சியில் டாடா இறங்கியிருக்கின்றது.
அதேசமயம், இந்த சிறப்பு கடன் திட்டத்தில் ஐந்து வருடங்களுக்கான நிதியுதவிக்கு 100 சதவீத கடனை வழங்கவும் டாடா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று (புதன்கிழமை) டாடா வெளியிட்ட அறிக்கையில், "இந்த சலுகை தகுதியுள்ள சம்பளத்தைப் பெறுபவர் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். கருர் வைஸ்யா வங்கியுடனான (கே.வி.பி) கூட்டின் மூலம் இந்த சலுகை வழங்கப்படுகிறது" தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, டாடா நிறுவனம் இந்த சிறப்பு கடன் திட்டத்தை வழங்க கரூர் வைஸ்யா வங்கியுடன் இணைந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த இணைவின் மூலமே நீண்ட நாள் கடன் திட்டங்களையும் அது வழங்க இருக்கின்றது. அதாவது, எட்டு வருடங்கள் வரையிலான இஎம்ஐ திட்டத்தை அது வழங்க இருக்கிறது. இதற்காக கரூஸ் வைஸ்யா வங்கியுடன் மட்டுமின்றி வேறு சில நிதி நிறுவனங்களுடனும் டாடா கூட்டு வைத்து வருகின்றது.
COMMENTS