வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் பழக்கடைகளை சேதப்படுத்திய வீடியோ வைரலாகிய நிலையில் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.
திருப்பத்தூர்: வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் பழக்கடைகளை சேதப்படுத்திய வீடியோ வைரலாகிய நிலையில் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ நேற்று முதல் வைரலாக பரவி . அதில் ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறி திறக்கப்பட்ட பழக்கடைகள், தள்ளுவண்டி கடைகளை வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.
அப்போது தள்ளுவண்டிகளில் இருந்த பழங்களை கீழே வீசி எறிந்தார்; சில தள்ளுவண்டிகளை அப்படியே கொட்டி கவிழ்த்துவிட்டு சென்றார். கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த பழக் கூடைகளையும் வீதியில் கவிழ்த்துவிட்டார். இந்த வீடியோ நேற்று மாலை முதல் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுடன் வைரலானது.
இந்த வீடியோவை பார்த்து கடும் கோபம் அடைந்த திமுக எம்.பி. கனிமொழி, அதை தனத ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன். அதன் மீது, வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருட்களை கொட்டிக் கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது ? இவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இந்த சர்ச்சைக்கு சிசில் தாமஸ் வருத்தம் தெரிவித்ததுடன் விளக்கம் அளித்தார். அப்போது, காய்கறி, பழ வியாபாரிகளை நாங்கள் பலமுறை எச்சரித்தோம். ஆனாலும் அதே இடங்களில் அவர்கள் விற்பனை செய்து வருவதாக புகார் வந்தது. அப்பகுதியில் ஆய்வுக்கு சென்ற போதும் இதுபற்றி சொல்லி இருந்தேன். ஆனாலும் வியாபாரிகள் கேட்கவில்லை. கோயம்பேடு சந்தையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது போல் உருவாகிவிடக் கூடாது என்ற அச்சத்தால் நடவடிக்கை எடுத்தேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக அதை செய்தோம். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
இழப்பீடு கொடுத்தார் ஆணையர் மேலும் தம்முடைய தவறுக்காக வியாபாரிகளிடம் நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார் சிசில் தாமஸ். அத்துடன் தம்மால் கீழே தள்ளிவிடப்பட்ட பழங்களுக்கான இழப்பீட்டையும் நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், வியாபாரிகளிடம் கொடுத்தார். அப்போது நகராட்சி விதிகளை முறைப்படி பொதுமக்களும் வியாபாரிகளும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே பிரச்சைனை தீவிரமான நிலையில் ஆணையர் சிசில் தாமஸ் தம்முடைய தவறுக்காக வியாபாரிகளிடம் நேரில் சென்று வருத்தம் தெரிவித்தார். அத்துடன் கீழே தள்ளிவிடப்பட்ட பழங்களுக்கான இழப்பீட்டையும் வியாபாரிகளுக்கு அளித்தார். இந்நிலையில் ஆய்வு நடத்தச் சென்ற போது அத்துமீறலில் ஈடுபட்ட நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் பழக்கடைகளை சேதப்படுத்தியதோடு அங்கிருந்த வியாபாரிகளை தரக்குறைவாக பேசிய வீடியோ வைரலானதால் அவர் மீது மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குத் தொடர்ந்துள்ளது.
இந்ந சூழலில் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் பழக்கடைகளை சேதப்படுத்திய வீடியோ வைரலாகிய நிலையில் அவரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி கடை வைத்தவர்களை எச்சரித்திருக்கலாம். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு தள்ளுவண்டி கடைகளை தள்ளிவிட்டு, பழங்களை சேதப்படுத்தியதை யாருமே ஏற்கவில்லை. இதனால் இப்போது நடவடிக்கை அவர் மீது பாய்ந்துள்ளது.
COMMENTS