விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்வதாக பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை: விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்வதாக பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று எடப்பாடி பழனிச்சாமி எழுதியுள்ள கடிதத்தில் மேலும் என்ன கூறியுள்ளார் என்பதை பாருங்கள்:
பொருளாதார மீட்பு பேக்கேஜ் அறிவிப்புகள் தொடர்பாக பிரதமருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய பொருளாதாரத்தை மீட்க இந்த அறிவிப்புகள் உதவும் என்று நம்புகிறேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது, சுகாதார சோதனைக் கூடங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. தமிழக அரசு கடன் வாங்கும் அளவை அதிகரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் 3 சதவீதத்துக்கு மிகாமல் கடன் வாங்குவது என்பது தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லை என்பதால் இந்த விதிமுறை தளர்வு அவசியப்படுகிறது.
தமிழகத்தில் நிறைய சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அதிக நிதி தேவைப்படுகிறது என்பதால், இந்த கோரிக்கையை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்ய விரும்புகிறோம். விவசாயத்திற்கு மானியம் வழங்க கூடிய முடிவு என்பது, மாநிலங்களின் அதிகார வரம்புக்குள் விடப்பட வேண்டும். இது தொடர்பாக ஒருமித்த முடிவு எட்டப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, நீங்கள் ஆணையிட்டு இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
COMMENTS