தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்துக்கு கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை: தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்துக்கு கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக் கூடும். ஆகையால் அடுத்த 2 தினங்களுக்கு விவசாயிகள், பொதுமக்கள் முற்பகல் 11.30 முதல் மாலை 3.30 வரை திறந்த வெளியில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக் கூடும் என்பதான்ல் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக் கூடும் என்பதனால் மீனவர்கள் அடுத்த ஐந்து நாட்களுக்கு இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ்ஸையும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்ஸையும் ஒட்டி இருக்கும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
COMMENTS