ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கடந்த 2011 முதல் விளையாடி வரும் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் அந்த அணியில் விராட் கோலிக்கு நிகராக ரசிகர்கள் வட்டத்தை கொண்டுள்ளார்.
பெங்களூரு : ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கடந்த 2011 முதல் விளையாடி வரும் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் அந்த அணியில் விராட் கோலிக்கு நிகராக ரசிகர்கள் வட்டத்தை கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஆர்சிபி அணிக்காக தன்னுடைய வாழ்நாள் முழுவதும் விளையாட தான் ஆசைப்படுவதாக டீ வில்லியர்ஸ் தற்போது கூறியுள்ளார். ஆர்சிபி அணி, அதன் ரசிகர்கள் மற்றும் அவர்களின் நட்பு ஆகியவை தன்னுடைய மனதிற்கு நெருக்கமானது என்றும் அதைவிட்டு போக மனதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டு உலகில் இந்தியாவின் அடையாளமான ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு கொரோனாவால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள், வீரர்கள் உள்ளிட்டவர்கள் மட்டுமின்றி பிசிசிஐயும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் நடைபெறவில்லை என்றால் 4000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஆர்சிபியில் கடந்த 2011 முதல் பங்கேற்று விளையாடி வருகிறார் தென்னாப்பிரிக்க அணி வீரர் ஏபி டீ வில்லியர்ஸ். இவருக்கு அந்த அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நிகராக ரசிகர்கள் காணப்படுகின்றனர். அந்த அணியில் வில்லியர்ஸ் மற்றும் கோலி இணைந்து அதிகமான பார்ட்னர்ஷிப்புகளை உருவாக்கியுள்ளனர்.
இந்நிலையில் தன்னுடைய வாழ்நாள் உள்ளவரை தான் ஆர்சிபிக்காக விளையாட வேண்டும் என்று தென்னாப்பிரிக்க மற்றும் ஆர்சிபி வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, வில்லியர்ஸ் இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் பொம்மி ம்பாங்வாவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலை ஆர்சிபி தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
ஆர்சிபி அணி, அதன் ரசிகர்கள் மற்றும் அவர்கள் உருவாக்கியுள்ள நட்பு ஆகியவை தன்னுடைய மனதிற்கு நெருக்கமானது என்றும் அதைவிட்டு போக மனதில்லை என்றும் வில்லியர்ஸ் குறிப்பிட்டுள்ளார். இதை ஆர்சிபிக்காக விளையாடிய சில ஆண்டுகளிலேயே தான் உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
COMMENTS