கொரோனாவால் இந்தியாவில் 85,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,753 பேர் பலியாகிவிட்டனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாள்தோறும் கவலையை அளித்து வருகிறது.
டெல்லி: கொரோனாவால் இந்தியாவில் 85,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,753 பேர் பலியாகிவிட்டனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாள்தோறும் கவலையை அளித்து வருகிறது. என்னதான் மருத்துவமனைகளிலிருந்து நோயாளிகள் வீடு திரும்பினாலும் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 85,749 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 2,753 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 30,138 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
52,858 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 20.39 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் 29,100 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 1068 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6564 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. இங்கு 10,108 ஆக பாதிப்பு உள்ளது. 71 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 2,599 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் ராயபுரத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது. அது போல் தமிழகத்தில் மொத்த பாதிப்பில் 50 சதவீதம் பேர் சென்னை மாநகராட்சியை சேர்ந்தவர்களாவர். கேரளாவில் 576 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 4 ஆக உள்ளது. இதுவரை 493 பேர் குணமடைந்துள்ளனர்.
தெலுங்கானாவில் 1,454 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. 959 பேர் வீடு திரும்பியுள்ளனர். குஜராத்தில் 9,932 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 606 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை 4,035 பேர் வீடு திரும்பினர்.
மத்திய பிரதேசத்தில் 4,595 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,283 பேர் வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் 88954 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3518 பேர் வீடு திரும்பியுள்ளனர். 123 பேர் பலியாகிவிட்டனர். உலகளவிலான பாதிப்பில் சீனாவை தாண்டியது இந்தியா.
COMMENTS