லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றிக் கடனாக அவர்களது பெயரை தனது குடும்ப ப...
லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றிக் கடனாக அவர்களது பெயரை தனது குடும்ப பெயருடன் இணைத்து புதிதாக பிறந்த தன் குழந்தைக்கு சூட்டியுள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரில் ஜான்சன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள செயின்ட் ஜான்சன் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது.
மிகவும் அபாய கட்டத்தில் இருந்த அவர் மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பின்னர் மறுபிறவி எடுத்தது போல் மீண்டு குணமடைந்து கடந்த 11ஆம் தேதி வீடு திரும்பினார். இந்த நிலையில் அவர் கடந்த வாரம் முதல் பணிக்குத் திரும்பினார். இதனிடையே அவருக்கும் அவரது காதலி கேரி சைமண்ட்ஸ் ஆகியோருக்கும் அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தனது நோய் தொற்றுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றிக் கடன் செலுத்த விரும்பினார் போரிஸ் ஜான்சன், அதன்படி அவர் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் பெயர்களை தனது குடும்ப பெயருடன் இணைத்து தனது குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார். இதுகுறித்து போரிஸ் ஜான்சன் தனது இன்ஸ்டாகிராமில் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அப்போது அவர் கூறுகையில் கொரோனா பாதிப்பால் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் இருந்த போது தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நிகோலஸ் பிரைஸ், நிகோலஸ் ஹார்ட் ஆகியோரை கவுரவிக்கும் விதமாக எனது குழந்தைக்கு எங்கள் இருவரின் குடும்ப பெயர்களுடன் மருத்துவர்களின் பெயர்களையும் இணைந்து வில்பிரட் லாரி நிகோலஸ் ஜான்சன் என பெயரிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். போரிஸ் ஜான்சனின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
நன்றி ஒன் இந்தியா !
COMMENTS