ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை வழங்கிவருகிறது. அன்மையில் இந்நிறுவனம் தனது ரூ.98ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடி திருத்தத்தை கொண்டுவந்தது, அதனை தொடர்ந்து இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில திட்டங்களில் டால்க் டைம் நேரத்தை அதிகப்படுத்தியுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை வழங்கிவருகிறது. அன்மையில் இந்நிறுவனம் தனது ரூ.98ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் அதிரடி திருத்தத்தை கொண்டுவந்தது, அதனை தொடர்ந்து இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில திட்டங்களில் டால்க் டைம் நேரத்தை அதிகப்படுத்தியுள்ளது.
தற்சமயம் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.500, ரூ.1000,மற்றும் ரூ.5000 என்கிற மூன்று திட்டங்களில் தான் டால்க் டைம் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதைப் பற்றி விரிவானத் தகவல்களைப் பார்ப்போம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.500 ரீசார்ஜ் திட்டத்தில் முன்பு ரூ.423.73 என்கிற பேச்சுநேரம் வழங்ப்பட்ட நிலையில், தற்சமயம் ரூ.480 என்கிற டால்க் டைமை வழங்கும்படி திருத்தம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.
அதேபோல ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1000 ரீசார்ஜ் திட்டத்தில் முன்பு ரூ.847.46 என்கிற பேச்சுநேரம் வழங்ப்பட்ட நிலையில், தற்சமயம் ரூ.960 என்கிற டால்க் டைமை வழங்கும்படி திருத்தம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.
பின்பு ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.5000 ரீசார்ஜ் திட்டத்தில் முன்பு ரூ.4,237 என்கிற பேச்சுநேரம் வழங்ப்பட்ட நிலையில், தற்சமயம் ரூ.4,800 என்கிற டால்க் டைமை வழங்கும்படி திருத்தம் செய்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.
அதேபோல் இந்நிறுவனம் பிரபலமான ரூ.98 டேட்டா ஆட்-ஆன் பேக்கில் டபுள் டேட்டா அறவித்துள்ளது. இந்த பேக்கில் முன்னதாக 6ஜிபி அளவிலான டேட்டா வழங்கப்பட்ட நிலையில் தற்போது 12ஜிபி டேட்டா கிடைக்கும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.98-பேக்கின் டேட்டா நன்மையை அதிகரித்தபோதிலும், வேலிடிட்டி மீது எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. இந்த பேக் 28நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் மற்றொரு ரூ.48 டேட்டா ஆட் ஆன் பேக்கின் மீது எந்த திருத்தமும் செய்யப்படவில்லை, பின்பு இதுபயனர்களுக்கு 3ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவை மொத்தம் 28நாட்கள் என்கிற செல்லுபடியின் கீழ் வழங்குகிறது.
COMMENTS