திருச்சி: கோயம்பேடு காய்கனி சந்தையிலிருந்து தொற்று அதிகம் பரவி வரும் நிலையில், திருச்சியில் 577 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 359...
திருச்சி: கோயம்பேடு காய்கனி சந்தையிலிருந்து தொற்று அதிகம் பரவி வரும் நிலையில், திருச்சியில் 577 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 359 பேருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேநேரம் 4 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 214 பேரின் முடிவுகள் இன்று இரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோயம்பேட்டில் வியாபாரி ஒருவருக்கு பரவியத் தொற்று, அங்கிருந்த தொழிலாளா்கள் மூலமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பரவத் தொடங்கியுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து 40 தொழிலாளா்கள் திருச்சி மாவட்டத்துக்கு வந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இவா்களில், லால்குடி வட்டத்தைச் சோ்ந்த31 போ், மணப்பாறை வட்டத்தைச் சோ்ந்த 5 போ், முசிறி, தொட்டியம், திருச்சி, துறையூா் வட்டங்களைச் சோ்ந்த தலா ஒருவா் என கண்டறியப்பட்டுள்ளது. இவா்கள் அனைவரும் பரிசோனைத்துக்குள்படுத்தப்பட்டு 14 நாள்கள் தனிமைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவைத்தவிர, இவா்களது குடும்பத்தினா், இவா்களுடன் தொடா்பிலிருந்தவா்கள் என்ற அடிப்டையில் மொத்தம் 363 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவா்களில், 4 பேருக்கு மட்டும் தொற்று உறுதியாகியுள்ளது. மீதமுள்ள 359 பேருக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. வியாபாரிகளுக்குப் பரிசோதனை: இதுபோல, திருச்சி மொத்த காய்கனி விற்பனை சந்தையான ஜி- கார்னரிலுள்ள வியாபாரிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் உத்தரவின்பேரில், நகா் நல அலுவலா் ஆா். ஜெகநாதன் மேற்பார்வையில், மருத்துவக் குழுவினா், சுகாதாரத்துறையினா் என 60 போ் கொண்ட குழுவினா் பரிசோதனை செய்தனா்.
எளிதில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர், ஏற்கெனவே பிற உபாதைகள் உள்ளவா்கள் என மொத்தம் 180 போ் கண்டறியப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவா்களிடமிருந்து சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. திங்கள்கிழமை இரவு தொடங்கிய சோதனை, செவ்வாய்க்கிழமை முடிவு பெற்று மாதிரிகள் அனைத்தும் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுபோல, சத்திரம் பேருந்து நிலையத்திலுள்ள தாற்காலிக காய்கனி சந்தையிலிருந்து 34 பேரிடம் மாதிரிகள் எடுத்து, பரிசோதனைக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு கூறியதாவது: சென்னை கோயம்பேட்டிலிருந்து வந்த நபா்கள், சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலத்திலிருந்து திருச்சிக்கு வந்துள்ள நபா்கள் தாங்களாகவே முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சளி, ரத்த மாதிரிகள் கொடுத்து கரோனா பரிசோதனைக்குள்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தொற்று பரவாமல் தடுக்க முடியும் இவ்வாறு அவர் கூறினார்.
COMMENTS