சேலம்: 144 தடை உத்தரவினை அமல்படுத்துவல் சேலம் மாநகர காவல்துறை சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசிய பொருட...
சேலம்: 144 தடை உத்தரவினை அமல்படுத்துவல் சேலம் மாநகர காவல்துறை சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்லும் வாகனங்களுக்கு ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மடடுமே அனுமதி வழங்கப்படும். தேவையின்றி சுற்றித்திரியும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோன வைரஸ் பரவுவதை தடுக்க சேலம் மாநகர அதிரடியாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடுமையாக அமல்படுத்தப்ட்டு வருகிறது. அதையும் மீறி வெளியே சுற்றித்திரியும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாகக்கூறி, அதிகமான மக்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றித்திரிவதால் கொரோனா தொற்று சமூக பரவலாக மாற வாய்ப்புள்ளது. எனவே இதனை தடுக்கும் விதமாக சேலம் மாநகர சாலைகளில் செல்லக்கூடிய வாகனங்களுக்கு இன்று (9.4,2020) முதல் சேலம் மாநகர காவல்துறை சார்பில் புதியதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளியே சென்று தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிவர வேண்டும். இதனை தீவிரமாக நடைமுறைப்படுத்தும் விதமாக ஒவ்வொரு நாளும் வெளியே செல்லக்கூடிய வாகனங்களின் பதிவெண் தகட்டின் (number plate) மீது ஒரு வண்ணம் என ஐந்து நாட்களுக்கும் ஒவ்வொரு வண்ணத்தால் அடையாள குறியீடு இடப்படும்.
அவ்வாறு அடையாள குறியீடு செய்யப்பட்ட வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நாட்களை தவிர மற்ற நாட்களில் தேவையின்றி வெளியே சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டால், மேற்படி வாகன ஓட்டி மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்வதுடன் அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்படும் என மேசல மாநகர காவல்துறை சார்பாக கடுமையாக எச்சரிக்கப்படுகிறது" இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி ஒன் இந்தியா !
COMMENTS