இன்று ஆர்பிஐ ஆளுநர் பேசி இருக்கும் செய்தி வெளியான உடனேயே சென்செக்ஸ் சுமாராக 900 புள்ளிகள் ஏற்றம் கண்டன. 31,500-க்கு மேல் வர்த்தகமாயின. இன்...
இன்று ஆர்பிஐ ஆளுநர் பேசி இருக்கும் செய்தி வெளியான உடனேயே சென்செக்ஸ் சுமாராக 900 புள்ளிகள் ஏற்றம் கண்டன. 31,500-க்கு மேல் வர்த்தகமாயின. இன்று காலை 10 மணிக்கு சக்தி காந்த தாஸ் பேசத் தொடங்கினார். கொரோனாவால் இந்தியப் பொருளாதார கடுமையான சவால்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறது. அதை ஆர்பிஐ கண்காணித்து வருகிறது என பேசத் தொடங்கினார். மெஏற்கொண்டு இந்தியப் பொருளாதாரம் சரியாமல் இருக்க தேவையானதைச் செயய் வேண்டும் என்பது தான் ஆர்பிஐ நோக்கம் எனவும் தெளிவுபடுத்தினார் சக்தி காத தாஸ்.
பொருளாதார சரிவு 2021, 2022 ஆண்டுகளில் சுமாராக 9 ட்ரில்லியன் டாலர் நஷ்டத்தை உலக பொருளாதார ஜிடிபி சந்திக்கும் என பன்னாட்டு நிதியம் (IMF - International Monetary Fund) கணித்து இருக்கிறது. 2020-ல் உலக பொருளாதாரம் பெரிய ரெசசனுக்குப் போகலாம் எனவும் சொல்லி இருக்கிறார்.
ஜிடிபி அதோடு இந்தியா 1.9% ஜிடிபி வளர்ச்சி காணும் என பன்னாட்டு நிதியம் (IMF - International Monetary Fund) கணித்து இருந்ததையும் குறிப்பிட்டார் தாஸ். 2021 - 22 நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4%-மாக இருக்கும் எனவும் IMF கணிப்புகளை மேற்கோள் காட்டி இருக்கிறார்.
இந்திய பொருளாதாரம் மார்ச் 27-க்குப் பிறகு மேக்ரோ பொருளாதாரம் மற்றும் நிதிப் பார்வைகள் பலவீனமடைந்து இருக்கின்றன. ஆனால் ஐஐபி பாதிக்கப்படவில்லை. ஏற்றுமதி 34 % சரிந்து இருக்கிறது. இது 2008 - 09 காலகட்டத்தை பெரிய சரிவு எனக் குறிப்பிட்டு இருக்கிறார் சக்தி காந்த தாஸ்.
வங்கித் துறை ஆர்பிஐ 3.2 % ஜிடிபி அளவுக்கு பணத்தை கடந்த பிப்ரவரி 06 - மார்ச் 27 2020 காலத்தில் பணத்தைச் செலுத்தி இருக்கிறார்களாம். ஏடிஎம் 91 % செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இணைய சேவைகள் மற்றும் மொபைல் பேங்கிங் இந்த லாக் டவுன் காலத்தில் தடைபடவில்லை. வங்கிகள் வழக்கம் போல செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது.
ஆர்பிஐ நோக்கம்
1. இந்திய நிதித் துறையில் நிதி நெருக்கடி ஏற்படாமல் பார்த்துக் கொள்வது.
2. வங்கி கடன்களுக்கு ஏற்பாடு செய்வது மற்றும் ஊக்குவிப்பது
3. நிதி அழுத்தங்களைக் குறைப்பது
4. வழக்கம் போல சந்தைகளை செயல்பட வைப்பது..
போன்றவைகளை நோக்கமாகக் கொண்டிருபப்தாகச் சொன்னார் தாஸ்.
நறுக் புள்ளிகள் ஆர்பிஐ தன் ரிவர்ஸ் ரெப்போ ரேட்டை 0.25% குறைத்து இருக்கிறது. தற்போது ரிவர்ஸ் ரெப்போ ரேட் 3.75%-மாக குறையும். ரெப்போ ரேட்டை குறைகக்வில்லை. 50,000 கோடி ரூபாயை சிறு குறு தொழிற்சாலைகளுக்கு பூஸ்டர் பேக்கேஜகளாக் அறிவித்து இருக்கிறது. அதே போல 15,000 கோடி ரூபாயை SIDBI, 25,000 கோடி ரூபாயை NABARD, 10,000 கோடி ரூபாய் ஹவுசிங் ஃபனான்ஸ் கம்பெனிகளுக்கு கொடுத்து இருக்கிறது ஆர்பிஐ.
அந்நிய செலாவணி இந்த இக்கட்டான சூழலில் கூட மத்திய ரிசர்வ் வங்கியின் கைவசம் சுமார் 476 பில்லியன் டாலர் இருப்பதாகச் சொல்லி ஆறுதல் கொடுத்து இருக்கிறார் சக்தி காந்த தாஸ். இதை வைத்து சுமாராக அடுத்த 11 மாதங்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்து கொள்ளலாமாம்.
TLTRO வங்கிகள் தங்களின் 50 % நிதியை TLTRO - 2 ஃபண்டின் கீழ் சிறிய மற்றும் நடௌத் தர வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும். அதோடு மாநிலங்களுக்கான WMA வரம்பு 60 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. இது செப்டம்பர் 30, 2020 வரை இந்த நீட்டிப்பு இருக்குமாம். எனவே மாநிலங்கள் கூடுதலாக கடன் வாங்கிக் கொள்ளலாம்.
90 நாள் என்பிஏ 90 நாட்களுக்கு இஎம்ஐ ஒத்திவைப்பு அறிவித்து இருந்தது ஆர்பிஐ. இந்த 90 நாட்கள் இஎம்ஐ ஒத்திவைப்பு காலம் வாரா கடன் காலத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது எனவும் இன்னொரு நல்ல விஷயத்தைச் சொல்லி இருக்கிறார் ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸ்.
COMMENTS