கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தற்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம்...
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அதிக பாதிப்பு உள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தற்போது வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கியதும் கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். அதற்கு முன்னதாக கடந்த மார்ச் 20-ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மோடி ஆலோசனை நடத்தியிருந்தார். மேலும் கோவிட் 19-ஐ எதிர்த்து அனைவரும் கடுமையாக போராட வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சமூக பரவலைத் தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மன் கீ பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது அவர் கூறுகையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தமைக்கு என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் வீட்டில் இருந்தால்தான் கொரோனா உங்கள் வீட்டில் வராது என தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை செய்யவுள்ளார்.
இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தில் டெல்லியில் நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தேடி கண்டுபிடிப்பது குறித்தும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும் பேசுவார் என தெரிகிறது.
COMMENTS