டெல்லி: சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்த பொருளும் வாங்கப்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிவித்துள்ளது. ...
டெல்லி: சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்த பொருளும் வாங்கப்படாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிவித்துள்ளது.
சீனாவின் குவாங்ஜூ நகரைச் சேர்ந்த வாட்போ பயோடெக், ஜூஹாய் லிவ்ஸன் டயாக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் மூலம் சோதிக்கப்பட்ட முடிவுகளில் பெரும் வேறுபாடு இருந்தது. இது தொடர்பாக பல்வேறு மாநிலங்கள் புகார்கள் தெரிவித்தன.
குறிப்பாக ராஜஸ்தான் அரசு சீனாவிலிருந்து வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவியில் பரிசோதனை முடிவுகள் 95 சதவீதம் தவறாக வருவதாக சமீபத்தில் ராஜஸ்தான் மாநில அரசு புகார் தெரிவித்தது. இதையடுத்து விசாரணை நடத்திய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ,சீனாவில் இருந்து இரு நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவியை மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டாம். அதை மீண்டும் திருப்பி அனுப்புங்கள் என்று அறிவுறுத்தி நேற்று அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் தரமற்ற உபகரணங்கள் கொடுத்த சீனாவின் குவாங்ஜூ நகரைச் சேர்ந்த வாட்போ பயோடெக், ஜூஹாய் லிவ்ஸன் டயாக்னாஸ்டிக்ஸ் நிறுவனத்திடம் வரும் காலங்களில் இனி எந்த மருத்துவ உபகரணங்களும் வாங்கப்படாது என்று ஐசிஎம்ஆர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று ஐசிஎம்ஆர் வெளியிட்ட அறிவிப்பில், சீனாவின் குவாங்ஜூ நகரைச் சேர்ந்த வாட்போ பயோடெக், ஜூஹாய் லிவ்ஸன் டயாக்னாஸ்டிக்ஸ் நிறுவனங்களுக்கு ஐசிஎம்ஆர் சார்பில் எந்தவிதமான பணமும் செலுத்தவில்லை. எந்தவிதமான பணமும் முன்கூட்டியே வழங்கப்படவும் இல்லை. இந்திய அரசுக்கு இந்த ஆர்டரை ரத்து செய்ததால், ஒரு ரூபாய்கூட இழப்பு ஏற்படாது என்று தெரிவித்தது.
இதற்கிடையே ரேபிட் கருவிகளைப் பயன்படுத்தி வரும் மாநில அரசுகள் இதைக் கண்காணிப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கொரோனா வைரஸை கண்டறிய ஆர்டி-பிசிஆர் ஸ்வாப் பரிசோதனையை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.
COMMENTS