டெல்லி: நாட்டில் லாக்டவுனை மேலும் நீட்டிப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி வரும் திங்கள்கிழமை வீடியோகான்ப...
டெல்லி: நாட்டில் லாக்டவுனை மேலும் நீட்டிப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி வரும் திங்கள்கிழமை வீடியோகான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
வரும் திங்கட்கிழமை ஏப்ரல் 27ம் தேதி காலை, அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார்.
தற்போது நாட்டில் 2வது ஊரடங்கு காலகட்டம் நிலவுகிறது. மே 3ம் தேதி வரை, இது தொடரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஊரடங்கு காலகட்டத்திலும் கூட கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்த காலகட்டத்தில் துரிதமாக சோதனைகளை நடத்தி நோயாளிகளை கண்டறிந்து இருக்க வேண்டும். ஆனால் அது போல நடக்கவில்லை. ரேபிட் டெஸ்ட் கருவியும் பயன்படுத்த முடியாத நிலையில், அவை திருப்பி அனுப்பப்பட்டது. அவற்றில் 94 சதவீதம் போலியான ரிசல்ட் வருவதாக கூறப்பட்டது.
எனவே, ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதை தவிர வேறு வழியில்லை என்று பிரதமர் கருதுகிறார். எந்தெந்த மாநிலங்களில் இதற்கான அவசியம் இருக்கிறது என்பதை திங்கள்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கேட்பார் என்று தெரிகிறது.
ஒரு சில மாநிலங்களில் முழுமையான ஊரடங்கை பின்பற்ற ஒரு சில மாநிலங்கள் ஓரளவு கொடுக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு என்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் நிலவுகிறது. எனவே இந்த ஆலோசனைக் கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
தளர்வுடன் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்தாலும், தமிழகம் அந்த பட்டியலில் வருவது சந்தேகம் என்கிறார்கள். நோயாளிகள் எண்ணிக்கை 1600ஐவிட அதிகமாக இருப்பதால், தளர்வுக்கு இப்போதைக்கு வாய்ப்பு இருக்காது என்றும் லாக்டவுன் 3க்குத்தான் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
COMMENTS