இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓர் பெண்ணை வாழ்த்துவதற்காக நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் வரிசைக் கட்டி நின்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது...
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓர் பெண்ணை வாழ்த்துவதற்காக நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் வரிசைக் கட்டி நின்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
டுவிட்டர், முகப்புத்தகம் போன்ற சமூக வலை பக்கங்களில் வீடியோ ஒன்று மிக வேகமாக வைரலாகி வருக்கின்றது. அந்த வீடியோவில், ஓர் இளம்பெண் தனது வீட்டைவிட்டு வெளியே வந்து, சாலையோரத்தில் நிற்கின்றார். அப்போது, அவரை நூற்றுக் கணக்கான வாகனங்கள் கடந்துச் செல்கின்றன. அவை அனைத்தும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தவாறு செல்கின்றன. அதில் சில காவலர்களின் வாகனங்களும் அடங்கும்.
அதில், முன்னதாக வரும் கார் மட்டும் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு நன்றி தெரிவிக்கும் பதாகை ஒன்றை அப்பெண் முன்பாக நடுகின்றது. அதற்குள்ளாக, பின்தொடர்ந்து வந்த கார்கள் மற்றும் காவலர்களின் வாகனங்கள் ஒலி எழுப்பியவாறு அவசரப்படுத்தின. இதனால், அந்த கார் அங்கிருந்து விரைந்து செல்ல நேரிடுகின்றது. தொடர்ச்சியாக வரும் ஒவ்வொரு கார்களும் ஹாரனை அடித்தவாறும், கூச்சலிட்டும் அவருக்கு நன்றியை தெரிவித்தவாறே செல்கின்றன.
தொடர்ச்சியாக வந்த காவலர்களின் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் அதேபோன்று ஹாரன் அடித்து அப்பெண்ணுக்கு மரியாதை செலுத்தின. பார்ப்போரை ஒரு நிமிடம் நெகிழ செய்கின்ற வகையில் இருக்கும் இந்த சம்பவம் அமெரிக்காவில் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அப்பெண் இந்திய வம்சாவெளியைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகின்றது.
Dr Uma Madhusudan, an Indian doctor, was saluted in a unique way in front of her house in USA in recognition of her selfless service treating Covid patients pic.twitter.com/Hg62FSwzsP— Harsh Goenka (@hvgoenka) April 20, 2020
இதன் காரணத்தினாலேயே இத்தகையை மரியாதையை அமெரிக்கர்கள் செலுத்தியுள்ளனர். குறிப்பாக, அவர் நூற்றுக்கும் அதிகமான வைரஸ் தொற்றுடைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த முழுமையான தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், தன்னலம் மறந்து பிறர் நலத்திற்காக பணியாற்றியமைக்காக, நன்றி மறவா அமெரிக்கர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சுமார் 2 நிமிடங்களுக்கும் அதிகமாக இருக்கும் அந்த வீடியோவில், கார்கள் தொடர்ச்சியாக வருவதைக் காண முடிகின்றது. மேலும், வீடியோ முடிந்தும் நீண்ட வரிசையில் கார்கள் நிற்பதையும் நம்மால் காண முடிகின்றது. ஏறக்குறைய இந்த கான்வாயில் 100-க்கும் அதிகமான கார்களே இருந்திருக்கும் என அந்நாட்டு பத்திரிக்கைகள் சில தெரிவித்துள்ளன.
கொரோனாவிற்கு எதிரான போரில் மருத்துவர்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. மேலும், முன் நின்று களத்தில் போராடுபவர்களில் மருத்துவர்களே முன்னணியில் இருக்கின்றனர். ஆகையால், உலகம் முழுவதும் மருத்துவர்களே மக்களின் கண்ட தெய்வமாக மாறியிருக்கின்றனர். இதன்காரணத்தினாலயே உலகின் வெவ்வேறு பகுதிகளில் இம்மாதிரியான விநோதமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
அதேசமயம், சில கசப்பான சம்பவங்களும் அரங்கேறிய வண்ணம் இருக்கின்றது. சமீபத்தில் வைரஸ் தொற்றால் இறந்த மருத்துவரின் உடலை நல்லடக்கம் செய்யவிடாமல், மக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மருத்துவர்களின் உயிர்காக்கும் பணியை எவ்வாறு மதிக்க வேண்டும் என உலகிற்கே பாடம் கற்பிக்கும் வகையில் அமெரிக்கர்கள் நடந்துக்கொண்டுள்ளனர். தற்போது வைராசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கின்றது. அங்கு இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 24) 8,80,204 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,325 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால், அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49,845 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் அண்மைக் காலங்களாக மிக தீவிரமாக பரவி வருகின்றது. மனிதர்களை மட்டுமின்றி தற்போது விலங்குகளையும் அது பாதித்து வருகின்றது. இதனால், உலகமே மிக இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருக்கின்றது. எனவே, ஒருவரை ஒருவர் இந்த வைரசிடம் பாதுகாப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது.
COMMENTS