கச்சா எண்ணெய் வீழ்ச்சி:நன்மையா தீமையா? சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வீழ்ச்சி அடைந்தது குறித்து பலரும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். ...
கச்சா எண்ணெய் வீழ்ச்சி:நன்மையா தீமையா?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வீழ்ச்சி அடைந்தது குறித்து பலரும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
இதனால் பெட்ரோல் டீசல் விலை குறையும் என பலர் புளகாங்கிதம் அடைகின்றனர்.
கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சியை கொண்டாடுபவர்கள் பொருளாதாரம் பற்றிய அடிப்படை அறிவற்றவர்கள்.
விலை குறைவதற்கும் விலை வீழ்ச்சி அடைவதற்கும் வித்தியாசம் உண்டு.
50 ரூபாய்க்கு விற்ற தக்காளி 30 ரூபாய்க்கு விற்பது விலை குறைப்பு.
50 ரூபாய்க்கு விற்ற தக்காளி 50 பைசாவுக்கு விற்பது விலை வீழ்ச்சி.
சர்வதேச பொருளாதாரமே கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தை அடிப்படையாக கொண்டவை.
கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைவது என்பது அதோடு நின்று விடாது. இதன் காரணமாக நீங்கள் வாங்கி வைத்துள்ள வீடு வாகனம் சொத்துக்கள் தங்கம் போன்றவற்றின் மதிப்பு பன்மடங்கு குறையும்.
ரியல் எஸ்டேட் துறை கடும் வீழ்ச்சியை சந்திக்கும்.
பல நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தை இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்பட்டு லட்சக்கணக்கானவர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்.
பணவீக்கம் அதிகரித்து இன்னும் சொல்லப்போனால் பணத்தின் மதிப்பே குறைந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயரும்.
பணத்தின் மதிப்பு குறைந்தால் பின்னர் ஜிம்பாப்வே போல ஒரு பாக்கெட் Bread வாங்குவதற்கு ஒரு பெட்டி நிறைய பணத்தை கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
இத்தனைக்குப் பிறகும் பெட்ரோல் டீசல் விலை 20 ரூபாய்க்கு விற்கபட்டாலும் அந்த 20 ரூபாய் செலுத்துவது என்பதெ நமக்கு மிகப்பெரிய சுமையாகவே இருக்கும்.பின்னர் அது 10 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் அதனால் நமக்கு எந்தவிதமான நன்மையும் இருக்காது.
ஒரு பொருளின் விலை திடீரென உயர்ந்தாலும் பிரச்சனை வீழ்ச்சி அடைந் தாலும் சிக்கல். சீரான பொருளாதார வளர்ச்சிக்கு பொருட்களின் விலை சீராக(Price Stabilisation) நிலையாக இருப்பதும் அவசியம். இதனால்தான் பெரும்பாலான நாடுகளில் பொருட்களின் விலையை சீராகவும் கட்டுக்குள் வைக்க அரசுகள் Price Stabilization Fund என்கிற ஒரு தனி நிதியையே ஏற்படுத்தியிருக்கும்.
இவையெல்லாம் ஒன்றோரொன்று ஒரு சங்கிலித் தொடர் போன்று பிணைந்தவை.கிட்டதட்ட ஒரு சீட்டுக்கட்டை போன்றது.ஒரு சீட்டை உருவினால் அது மொத்தமே சரிந்து போகும்.
எனவே கச்சா எண்ணெய்யின் விலை வீழ்ச்சி என்பது கொண்டாடப்பட வேண்டிய சங்கதி அல்ல.
அது மிகப்பெரிய பொருளாதார பேரழிவின் துவக்கமாக அமையும்.
COMMENTS