இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,363 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று நோய் தாக்கி இதுவரை 339 பேர் மரணமடைந்துள்...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,363 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று நோய் தாக்கி இதுவரை 339 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் 31 பேர் மரணமடைந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 160. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,173 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து டெல்லியில் ஒரே நாளில் 350க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அங்கு மொத்த எண்ணிக்கை 1,510 ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தானில் 873 பேரும் மத்திய பிரதேசத்தில் 604 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் கொரோனாவுக்கு 43 பேர் பலியாகி உள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் 558, தெலுங்கானாவில் 562 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
INDIA COVID-19 TRACKER கணக்கின்படி இந்தியாவில் கொரோனாவால் 10,453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 358 என்கிறது இப்புள்ளி விவரம். டெல்லியில் நேற்று மட்டும் 356 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அங்கு மொத்தம் 1,510 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்கிறது இப்புள்ளி விவரம்.
COMMENTS