மும்பை: இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இன்று ஒரே நாளில் 107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மும்பையில் கொரோனாவால...
மும்பை: இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் இன்று ஒரே நாளில் 107 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2043 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 116 பேர் உயிரிழந்துள்ளளனர். இன்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 202 பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்று ஒரு நாளில் மட்டும் 21 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மகாராஷ்டிராவின் மும்பைக்கு அடுத்தபடியாக இன்னொரு முக்கியமான நகரான புனேவில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று புனேவில் 55வயது , 54 வயது நபர், 47 வயது பெண் உள்பட 3 பேர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்கள். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் முக்கியமான பகுதியான தாராவியில் தமிழர்கள் அதிக அளவு வசிக்கிறார்கள்.
இங்கு கொரோனா வைரஸ் படுவேகமாக பரவி வருகிறது. அங்கு இன்று ஒரே நாளில் 11 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது, இது வரை தாராவியில் 9 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் இந்தியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள அங்கு கொரோனா பரவுவதை தடுப்பது பெரும் சவாலாக இருக்கும் என்பதால் கவலைகளை அதிகரித்துள்ளது,.
COMMENTS