டெல்லி: பி.சி.ஜி தடுப்பூசி (BCG vaccination) பாலிசி இல்லாத நாடுகள் கோவிட் -19 பாதிப்பால், பத்து மடங்கு அதிக எண்ணிக்கையில் இறப்பை சந்தித்து...
டெல்லி: பி.சி.ஜி தடுப்பூசி (BCG vaccination) பாலிசி இல்லாத நாடுகள் கோவிட் -19 பாதிப்பால், பத்து மடங்கு அதிக எண்ணிக்கையில் இறப்பை சந்தித்துள்ளன என்று ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
178 நாடுகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்த அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த உண்மையை கண்டுபிடித்துள்ளனர். பி.சி.ஜி. என்பது பேசிலஸ் கால்மெட்-குய்ரின் என்ற பெயரின் சுருக்கமாகும். காசநோய் அதாவது TB க்கான தடுப்பூசி இது ஆகும். இந்தியா போன்ற நாடுகளில் குழந்தைகளுக்கு, பிறந்த உடனேயே இந்த தடுப்பூசி போடப்படுகிறது.
அமெரிக்கா, இத்தாலி மற்றும் ஹாலந்து போன்றவை பணக்கார நாடுகளாக இருக்கலாம், ஆனால், ஒருபோதும் பி.சி.ஜி தடுப்பூசி பாலிசியை அவர்கள் வைத்திருக்கவில்லை.
178 நாடுகளில் மார்ச் 9 முதல் 24 வரை 15 நாட்களுக்கு கோவிட் -19 நிகழ்வுகளையும் இறப்பையும் இந்த ஆய்வு கணக்கிட்டுள்ளது. "பி.சி.ஜி தடுப்பூசி உள்ள நாடுகளில் கோவிட் -19 இன் பலி எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு 38.4 ஆக இருந்தது, இந்த தடுப்பூசியை பரவலாக்காத நாடுகளில் கொரோனா பலி எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு, 358.4 என்ற அளவில் அதிகமாக இருந்தது.
பி.சி.ஜி யின் பாதுகாப்பு விளைவை நாங்கள் எதிர்பார்த்தோம் என்றாலும், பி.சி.ஜி தடுப்பூசி உள்ள மற்றும் அது இல்லாத நாடுகளுக்கு இடையேயான பலி எண்ணிக்கை வித்தியாசம், கிட்டத்தட்ட 10 மடங்கு இருப்பது, மகிழ்ச்சியுடன் ஆச்சரியமாக இருந்தது, என்கிறார் டாக்டர் ஆஷிஷ் காமத்.
டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள எம்.டி. ஆண்டர்சன் புற்றுநோய் மையத்தில் சிறுநீரக புற்றுநோயியல் (அறுவை சிகிச்சை) மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி பேராசிரியராக இவர் பணியாற்றி வருகிறார். காச நோய் என்பது நுரையீரல் தொடர்பானது. கொரோனா வைரசும், நுரையீரலை தாக்கக் கூடியது. எனவே, காச நோய் தடுப்பூசி, மக்களுக்கு வலிமை சேர்க்கிறது என்று மருத்துவர்கள் கணக்கிட்டுள்ளனர்.
நன்றி ஒன் இந்தியா !
COMMENTS