ஒட்டோவா: கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.. கனடாவில் போலீஸ் டிரஸ், ஜீப்பில் வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட...
ஒட்டோவா: கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது.. கனடாவில் போலீஸ் டிரஸ், ஜீப்பில் வந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் பலியாயினர்... அந்த மர்ம நபர் போலீஸ் யூனிபார்மில் சகட்டுமேனிக்கு சுட்டு தள்ளி உள்ளார்.. ஏற்கனவே நிலைகுலைந்து போயுள்ள கனடாவில் இந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
கனடா நாட்டில் வைரஸ் தொற்று ஏற்கனவே அதிகமாகவே பரவி உள்ளது.. இந்நிலையில், வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் உள்ள போர்ட்டாபிக் என்ற ஊரில், மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியை எடுத்து மக்கள் மீது சுட ஆரம்பித்துவிட்டார்.. ஹாலிபாக்ஸுக்கு 100 கிமீ தொலைவில் இந்த ஊர் உள்ளது.
அந்த மர்ம நபர் போலீஸ்காரரை போல யூனிபார்ம் அணிந்திருந்தார்.. துப்பாக்கியில் சுடுவதற்கு முன்பு ஜீப்பில் கொஞ்ச நேரம் அங்கேயே சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.. இதற்கு பிறகுதான் வீடுகளுக்குள் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளார். மொத்தம் 17 பேரை சுட்டு பொசுக்கி விட்டார்... இந்த 17 பேரில் பெண் போலீஸ் ஒருவரும் அடக்கம்.
இவர் பெயர் ஹய்தி ஸ்டீவன்சன்.. வயசு 23 என்றும் தெரியவந்துள்ளது.. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனராம்.. மர்ம நபர் மக்கள் மீது தாக்குதல் நடத்தவும் அவர்களை காப்பாற்ற ஹய்தி போராடி உள்ளார்.. அப்போதுதான் இவரையும் சுட்டுள்ளார் மர்ம நபர்.. இந்த துப்பாக்கி சூட்டில் மற்றொரு போலீஸ்காரர் படுகாயமடைந்துள்ளார்.. துப்பாக்கி சூடு தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து நடவடிக்கையை மேற்கொண்டனர்... அந்த மர்ம யார் என்று உடனடியாக தெரியவில்லை.
அதனால் போலீஸ் வாகனங்களுடன் சேர்த்து ஹெலிகாப்டர்களும் மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதன்பிறகுதான் என்பீல்டு என்ற இடத்தில் ஒரு கேஸ் கம்பெனி முன்பு அவரை கண்டுபிடித்து துப்பாக்கியால் சுட்டு கொன்றுனர்.. அவர் பெயர் கேப்ரியல் வார்டுமேன்.. வயசு 51 என்று தெரியவந்துள்ளது.. போர்டபிக்கில் என்ற பகுதியை சேர்ந்தவர்.. போலீஸார் பயன்படுத்தும் ராயல் கனடியன் ஜீப்பில் இந்த பகுதியை சுற்றி சுற்றி வலம் வந்திருக்கிறார்.
ஆனால் இவருக்கு சம்பந்தப்பட்ட விரோதிகளுக்கு குறி வைத்து சுட்டு தள்ளியிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.. இந்த துப்பாக்கி சூட்டுக்கு முன்பாக இந்த பகுதி மக்களுக்கு போலீசார் ஏற்கனவே வெளியே வரக்கூடாது என்று எச்சரித்திருந்தனர்.. அதனால் குடியிருப்பு வாசிகள் வீடுகளுக்குள் பூட்டிக் கொண்டு இருந்துள்ளனர்.. அந்த வீடுகளுக்குதான் மர்ம நபர் தீ வைத்து கொளுத்தி உள்ளார்.
இப்படி ஒரு துப்பாக்கி சூடு இதுவரைக்கும் கனடாவில் நடக்காத ஒரு நிகழ்வாகும்.. அந்த பகுதி முழுதும் சடலமாக விழுந்து விடக்கிறது.. மற்ற இடங்களிலும் உடல்கள் கிடந்தன. இங்கு யாரும் லைசென்ஸ் இல்லாமல் துப்பாக்கி வைத்திருக்க கூடாது.. இந்நிலையில் அந்த நபருக்கு போலீஸ் ஜீப்பும், துப்பாக்கியும் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
"இப்படிப்பட்ட சமயங்களில் நாம் அனைவரும் ஒருத்தருக்கொருத்தர் ஆதரவாக இருப்போம்.. அனைவரும் சேர்ந்து உயிரிழந்த குடும்பங்களுக்கு நம் இரங்கலை தெரிவிப்போம்" என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியு தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா பலி எண்ணிக்கையால் அடி மேல் அடி வாங்கி வரும் கனடாவுக்கு இந்த சம்பவம் மேலும் ஒரு அதிர்ச்சியை பெருத்த அளவில் தந்து வருகிறது. மேலும் கொரோனா லாக்டவுனால் தவித்துள்ள அப்பகுதி மக்களுக்கு இந்த சம்பவம் பெரும் கிலியை ஏற்படுத்தி உள்ளது.
COMMENTS