நேற்று மார்ச் 27, 2020, மத்திய ரிசர்வ் வங்கி தன் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 0.75 % மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 0.90 %-ம் ...
நேற்று மார்ச் 27, 2020, மத்திய ரிசர்வ் வங்கி தன் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 0.75 % மற்றும் ரிவர்ஸ் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 0.90 %-ம் குறைத்தது.அதோடு இந்தியாவிலிருக்கும் அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், வசூலிக்கும் இ எம் ஐ (EMI) தவணைகளை தள்ளிப் போட அனுமதி கொடுத்தது.
இந்த அனுமதியை இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முறையாகப் பயன்படுத்தி இருக்கிறது.
எஸ்பிஐ தலைவர்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் ரஜ்னேஷ் குமார், ஆர்பிஐயின் இந்த பெரிய வட்டி விகித குறைப்புகளை வரவேற்றார். அதோடு, இ எம் ஐ (EMI) குறித்துக் கேட்ட போது "டேர்ம் லோன்களுக்கான இ எம் ஐ (EMI)-கள் அடுத்த 3 மாதங்களுக்கு தானாகவே ஒத்தி வைக்கப்படும் (Automatically deferred)" எனச் சொல்லி இருக்கிறார்.

விண்ணப்பம்
அதோடு, எஸ்பிஐ வங்கியில் கடன் வாங்கி இருப்பவர்கள், தங்கள் இ எம் ஐ (EMI) தவணைகளைத் தள்ளிப் போட, வங்கிகளிடம் தனியாக விண்ணப்பிக்கத் தேவை இல்லை எனவும் தெளிவுபடுத்தி இருக்கிறார். இது எஸ்பிஐயில் டேர்ம் லோன் வாங்கி இருப்பவர்களுக்கு பெரிய ஆறுதலாக அமைந்து இருக்கிறது.

எதெல்லாம் டேர்ம் லோன்
சொந்தமாக வீடு வாங்க வங்கியில் வாங்கி இருக்கும் வீட்டுக் கடன், எந்த வாகனமாக இருந்தாலும் பரவயில்லை என வாகனங்களை வாங்க வங்கியில் வாங்கி இருக்கும் ஆட்டோமொபைல் கடன், நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளுக்கான விவசாயக் கடன், பயிர் கடன் & மற்ற சில்லறைக் கடன் போன்றவைகள் எல்லாமே டேர்ம் லோனில் வரும் என மணி கண்ட்ரோல் வலைதளம் பட்டியலிட்டு இருக்கிறது.
மற்ற வங்கிகள்
இந்த தருணத்தில் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், மற்ற அரசு நிறுவனங்கள் என எல்லோரும் ஒன்று கூட, இந்த 3 மாத இ எம் ஐ (EMI) தவணைகளைத் தள்ளுபடி செய்தால் தான், இந்த நெருக்கடியான ஷட் டவுன் காலத்தில், கடன் வாங்கி இருப்பவர்கள் கொஞ்சமாவது தங்களை பார்த்துக் கொள்ள முடியும். மற்ற வங்கிகளும் விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்ப்போம்.
COMMENTS