கொரோனா வைரஸ். சொல்லும் போதே கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. ஒட்டு மொத்த உலகத்தைல் சுமார் 5.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ...
கொரோனா வைரஸ். சொல்லும் போதே கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. ஒட்டு மொத்த உலகத்தைல் சுமார் 5.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 24,000 பேர் மரணித்து இருக்கிறார்கள். இந்த ஒரு வைரஸால் உலக பொருளாதாரமே தள்ளாடிக் கொண்டு இருக்கிறது எனலாம். இந்த கொரோனா வைரஸால் இந்திய பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படு விடக் கூடாது என ஆர்பிஐ சில வட்டி விகிதங்களைக் குறைத்து இருக்கிறது. அவைகளை விரிவாகப் பார்ப்போம்.
வட்டி விகிதங்கள் தற்போது ரெப்போ ரேட் 5.15 சதவிகிதமாக இருந்தது, இதை 4.4 சதவிகிதமாகக் குறைத்து இருக்கிறார்கள். அதாவது 0.7 சதவிகிதம் வட்டியைக் குறைத்து இருக்கிறது ஆர்பிஐ. அதே போல ரிவர்ஸ் ரெப்போ ரேட் 4.90 சதவிகிதமாக இருந்தது, அதை 0.9 சதவிகிதம் குறைத்து 4 சதவிகிதமாக்கி இருக்கிறார்கள். இதனால் என்ன நன்மை.
ரெப்பொ ரேட் குறைப்பு ரெப்போ ரேட்டைக் குறைத்ததால், வங்கிகளுக்கு குறைந்த வட்டியில் ஆர்பிஐ இடமிருந்து பணம் கிடைக்கும். அதை வைத்து நிறைய பேருக்கு கடன் கொடுக்கலாம். அதோடு ரெப்போ ரேட் அடிப்படையில் தான் இன்று பெரும்பாலான கடன்களுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிக்கிறார்கள். எனவே இயற்கையாக கடனுக்கான வட்டி விகிதன்கள் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கலாம்.
டெபாசிட் வியாபார கடன், தனி நபர் கடன், வீட்டுக் கடன் எல்லாம் கணிசமாக குறையும் என மகிழ்ச்சி அடைபவர்கள் ஒரு பக்கம் என்றால், மறு பக்கம் ஃபிக்ஸட் டெபாசிட்டை நம்பி இருப்பவர்கள் கதி சிரமம் தான். ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கான வட்டி மேலும் குறையலாம். ஏற்கனவே ஃபிக்ஸட் டெபாசிட் தாரர்களுக்கான வட்டி எஸ்பிஐயில் அதிகபட்சமாக 5.9 சதவிகிதமாகத் தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிவர்ஸ் ரெப்போ ரேட் ஆர்பிஐ மற்ற வங்கிகளுக்கு கடன் கொடுத்து வட்டி வசூலிப்பார்கள் அது தான் ரெப்போ ரேட். அதே போல் மற்ற வங்கிகளும் ஆர்பிஐக்கு கடன் கொடுக்கும். இப்படி கொடுத்த கடனுக்கு வசூலிக்கும் வட்டி தான் ரிவர்ஸ் ரெப்போ ரேட். இப்போது ரிவர்ஸ் ரெப்போ ரேட்டையும் 0.9 % குறைத்து இருப்பதால், வங்கிகள், ஆர்பிஐ இடம் பணத்தை போட்டு வைப்பதற்கு பதிலாக, கடன் கொடுக்கத் தொடங்குவார்கள்.
யாருக்கு நன்மை வியாபாரம் செய்பவர்கள், இனி புதிதாக குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி கொஞ்சமவது கொரோனா பாதிப்பை சமாளித்துக் கொள்ளலாம். ஏற்கனவே கடன் வாங்கி இருப்பவர்களுக்கு மேற்கொண்டு இந்த வட்டி விகித குறைப்பால், கொஞ்சம் வட்டி குறையலாம்.
புதிய நபர்களுக்கு இனி புதிதாக வீடு, கார் போன்ற நுகர்வு சார்ந்த கடன்களை வாங்குபவர்கள் குறைந்த வட்டிக்கு கடன் பெற அதிக வாய்ப்பு இருக்கிறது. காரணம் இந்தியாவில் கொரோனா தாக்குவதற்கு பல மாதங்களுக்கு முன்பில் இருந்தே இந்தியாவில் நுகர்வு சரியத் தொடங்கிவிட்டது. இப்போது கொரோனா அந்த நுகர்வை மேலும் சிதைத்து இருக்கிறது. வங்கிகள் இன்னும் சில நாட்களில் ஒவ்வொரு வங்கியாக தங்கள் கடனுக்கான வட்டி விகிதங்களை குறைக்கத் தொடங்குவார்கள். எனவே வீட்டு, கார் போல நுகர்வு சார்ந்து கடன் வாங்க இருப்பவர்கள், உங்கள் வங்கிகளை விரைவில் அணுகி வட்டி விகிதங்களைக் கேளுங்கள் நல்ல வட்டி விகித என்றால் உடனடியாக களத்தில் கடன் வாங்குங்கள்.
COMMENTS