இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஏற்கனவே திட்டமிட்டபடி நாட்டில் உள்ள 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றும் திட்டம் ஏப்ரல் 1 ம...
இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஏற்கனவே திட்டமிட்டபடி நாட்டில் உள்ள 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றும் திட்டம் ஏப்ரல் 1 முதல் துவங்கும் என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதித்துள்ள இந்த நேரத்தில் வங்கி இணைப்புத் திட்டம் தள்ளிப்போடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி நடக்க உள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு அனுப்பிய மற்றொரு அறிக்கையில், வங்கி கிளைகள் புதிதாக இணைக்கப்படும் வங்கிகளின் பெயரில் தான் இனி இயங்கப் போகிறது. தற்போது நிலையில் வங்கி கிளைகள், ஊழியர்கள் எண்ணிக்கையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது. பெயர் மட்டும் தான் மாற்றப்பட உள்ளது.
இந்தியாவில் இருக்கும் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றப்படும் போது பொதுத்துறை வங்கிகளை வலிமையான வங்கிகளாக மாற்ற முடியும். இது நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சேவை எண்ணிக்கையிலும் சரி, சேவை தரத்திலும் சரி வங்கி மக்களுக்குச் சிறப்பான சேவையைக் கொடுக்க முடியும்.
கடந்த வாரம் வங்கி ஊழியர்கள் அமைப்பு, கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் நிறைந்துள்ள இந்த நேரத்தில் வங்கி இணைப்பைச் செய்ய வேண்டாம் என வங்கி ஊழியர்கள் அமைப்பு பிரதமர் அலுவலகத்திற்குக் கடிதம் அனுப்பியது. ஆனாலும் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஊழியர்களுக்கும், நிர்வாகத்திற்கும் எவ்விதமான பாதிப்பும் இல்லாத வகையில் வங்கி இணைப்பைச் செய்து முடிக்கத் திட்டமிட்டு வங்கி இணைப்பு பணிகளைச் செய்து வருகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை கூறுகையில், வங்கி இணைப்புப் பணிகள் அனைத்தும் சரியான வகையில் திட்டமிட்டு, சரியாக இயங்கி வருகிறது. எனவே எவ்வித தடையுமின்றி ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இணைப்புகள் திட்டமிடப்படி நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சகம் திட்டமிட்டபடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஓரியென்டன்ல் பாங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் வங்கி இணைய உள்ளது. கனரா வங்கியில் சின்டிகேட் வங்கி இணைய உள்ளது. இந்தியன் வங்கியில் அலகாபாத் வங்கி இணைய உள்ளது. யூனியன் பேங்க் ஆஃப் வங்கியில் கார்ப்ரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி இணைய உள்ளது.
ஏப்ரல் 1 முதல் இணைக்கப்படும் வங்கிகளின் கிளைகள் அனைத்தும் இணைக்கப்பட்ட வங்கியின் கிளைகளாக இயங்கும்.
COMMENTS