திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலத்தைச் சேர்ந்த பலரும் ம...
திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் அனைத்தும் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலத்தைச் சேர்ந்த பலரும் மொத்தமாக ஏற்கனவே வெளியேறிவிட்ட நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் வெளியே செல்ல முடியாது.
இந்தியாவின் முக்கியமான தொழில்நகரங்களில் ஒன்று திருப்பூர். இங்கு பல ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த நிறுவனங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்கள், மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள். திருப்பூரில் ஒட்டுமொத்தமாக 10 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை செய்து வருகிறார்கள். நாட்டிற்கு பல கோடி ரூபாய் அந்நிய செலாவணி ஈட்டி தரும் தொழில் நகரமாக விளங்குகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக திருப்பூர் மாநகரம் தற்போத முடங்கி உள்ளது. அரசின் உத்தரவு காரணமாக ஏற்கனவே விடுதிகள், பெரிய ஹோட்டல்கள், சந்தைகள், பெரும் வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் வரும் மார்ச் 31ம் தேதி திருப்பூர் முழுவதும் பின்னலாடை நிறுவனங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு மேல் வேலைக்கு செல்ல முடியாது என்பதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் யாரும் இனி வெளியே செல்ல முடியாது.
திருப்பூரின்அண்டை மாவட்டங்களான கோவையிலும், ஈரோட்டிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் இருப்பதால் திருப்பூர் மாநகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா முழுவதும் 400 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதுவரை 7 பேர் இறந்துள்ளார்கள்.
நன்றி ஒன் இந்தியா !
COMMENTS