கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க ஜூன் மாதத்திற்குள் 40,000 வென்டிலேட்டர்களை இந்தியா புதிதாக மருத்துவத்துறையில் சேர்க்க உள்ளது. COVID-19...
கொரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க ஜூன் மாதத்திற்குள் 40,000 வென்டிலேட்டர்களை இந்தியா புதிதாக மருத்துவத்துறையில் சேர்க்க உள்ளது.
COVID-19 காரணமாக 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே, அடுத்த மூன்று மாதங்களில் மேலும் 40,000 வென்டிலேட்டர்களைக் கொண்டுவருவதன் மூலம் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை அதிகரிப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்படி, மொத்தம் 724 நபர்கள் பாசிட்டிவாகியுள்ளனர். மார்ச் 27 ஆம் தேதி நிலவரப்படி 26,798 நபர்களிடமிருந்து 27,688 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தவும், சோதனை செய்யவும், கண்காணிக்கவும், சிகிச்சையளிக்கவும் உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்துள்ள வழிகாட்டுதல்களில் இந்தியா செயல்பட்டு வருவதாக சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
"இது முதல் நாளிலிருந்து எங்கள் திட்டமாக இருந்து வருகிறது, மேலும் இது ஒரு முன்கூட்டியே, தடுப்பு மற்றும் விரிவான அணுகுமுறையாகும். இன்று 1.4 லட்சம் நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்துள்ளன, மேலும் 22 லட்சம் சுகாதார ஊழியர்கள் 50 லட்சம் காப்பீட்டினால் பயனடைவார்கள் " என்று அவர் தெரிவித்தார்.
"10,000 வென்டிலேட்டர்களை உருவாக்க பொதுத்துறை நிறுவனத்திடம் கேட்டுள்ளோம், மேலும் 30,000 பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்திலிருந்து வரும். வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான எங்கள் முயற்சியில் பங்களிக்க எங்கள் பணியாளர்களுக்கு ஆன்லைன் முறை மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. '' என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அரசும், ஃபோர்டு உள்ளிட்ட கார் நிறுவனங்களை பயன்படுத்தி, வென்டிலேட்டர்களை தயாரிக்கும் பணியை துவங்கியுள்ளது. அமெரிக்கா, 1 லட்சம் வென்டிலேட்டர்களை தயாரிக்க முயன்று வருகிறது.
இந்தியாவிலும், மாருதி சுசுகி, மஹிந்திரா நிறுவனங்கள், இந்த உபகரண தயாரிப்பு பணியில் ஈடுபட கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
வென்டிலேட்டர் என்பவை, நோயாளிக்கு செயற்கை சுவாசம் அளிக்க பயன்படும் கருவி. நோயாளி மிக மோசமான அளவுக்கு பாதிக்கப்படும்போதுதான், வென்டிலேட்டர் தேவைப்படும். ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகள், 1 லட்சம் வென்டிலேட்டரை தயாரிப்பதை பார்த்தால், கொரோனா எவ்வளவு மோசமான வைரஸ் என்பதையும், அது நோயாளிகளை எப்படி மோசமாக தாக்குகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
நன்றி ஒன் இந்தியா!
COMMENTS