பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றிக்கொண்டிருக்கிறார்... மீண்டும் ஒருமுறை கொரோனா பாதிப்பு பற்றி பேச வந்துள்ளேன்- மோடி. பெரியவர்கள் ...
பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றிக்கொண்டிருக்கிறார்...
மீண்டும் ஒருமுறை கொரோனா பாதிப்பு பற்றி பேச வந்துள்ளேன்- மோடி. பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகள், வியாபாரிகள் எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்.
மீண்டும் ஒருமுறை கொரோனா பாதிப்பு பற்றி பேச வந்துள்ளேன்- மோடி. பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகள், வியாபாரிகள் எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும்.
பாதித்தவர்தான் என்று இல்லை- ஒவ்வொருவரும் வீட்டில் தனித்தே இருக்க வேண்டும். சிலரது அலட்சியம் குடும்பத்தையும் நாட்டையும் அழித்துவிடும். நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் முடக்கப்படுகிறது- யாருமே வீட்டை விட்டு வெளியேற வரக் கூடாது.
நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருநபரும் கொரோனாவை சுமந்து வருபவராக இருக்கலாம். ஒருவருக்கு ஏற்படும் கொரோனா பாதிப்பு பல நூறு பேருக்கு பரப்பிவிடும் அபாயம் உள்ளது
சுய ஊரடங்கை கடைபிடித்த அனைவருக்கும் நன்றி. கொரோனாவுக்கு எதிராக போரிட அனைவரும் திரண்டுள்ளனர். ஏழை, பணக்காரன் என பாகுபாடு இல்லாமல் அனைவரும் சுய ஊரடங்கில் பங்கேற்றன.
21 நாட்கள் முடங்கி இருக்காவிட்டால் 21 ஆண்டுகாலம் நாம் பின்னோக்கி செல்வோம். வீட்டை விட்டு வெளியே செல்வதையே 21 நாட்கள் பொதுமக்கள் மறந்துவிட வேண்டும்.
நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு யாரும் வீட்டை விட்டு வெளியேவரவே கூடாது.
21 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியேவரமாட்டோம் என சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டும். வீட்டை விட்டு வெளியேறினால் கொரோனா பேரழிவை வரவேற்பதாக அர்த்தம்.
இவ்வாறாக பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றிக்கொண்டிருக்கிறார்...
COMMENTS