தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் உட்பட நாடு முழுக்க 75 மாவட்டங்களை முடக்கி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. என...
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் உட்பட நாடு முழுக்க 75 மாவட்டங்களை முடக்கி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இங்கு மார்ச் 31ம் தேதிவரை பொதுப் போக்குவரத்து இருக்காது. கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் இருக்க கூடிய அளவுக்கு, உள்ள 75 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை தலைநகராக இருக்கின்றது. எனவே கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் எல்லையில் அமைந்துள்ளது. எனவே அதுவும் முடக்கப்படுகிறது. ஈரோடும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில், பஸ், ரயில், விமானம் போன்ற பொதுப் போக்குவரத்து சேவை என்பது இருக்காது.
- 144 தடை உத்தரவு போடப்பட்டது போல காட்சியளிக்கும்.
- அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து மாத்திரைகள், காய்கறிகள் போன்றவை கிடைக்கும்.
- அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து பிற சேவைகளில் பாதிப்பு ஏற்படும். இதில், பொதுப் போக்குவரத்து பாதிக்கப்படுவதும் அடங்கும்
- பிற பகுதிகளில் இருந்து இந்த மாவட்டங்களுக்குள் மக்கள் வரவும், அங்கேயிருந்து வேறு பகுதிக்கு போகவும் தடை நிலவும்.
- கலாசார நிகழ்ச்சிகள் நடத்த முடியாது, பொது நிகழ்ச்சிகள் நடத்த முடியாது
- திருமணம் உள்ளிட்டவற்றை செய்தாலும் கூட அதிக கூட்டம் சேர்க்க கூடாது
- 144 தடை உத்தரவுக்கு, என்னென்ன நடைமுறைகள் உண்டோ அவை இருக்கும்
தடையின்றி கிடைக்கும் பொருட்கள்:
- மளிகை பொருட்கள், பழம் மற்றும் காய்கறி கடைகள்பால் விநியோக சாவடிகள்
- சமையல் எரிவாயு விநியோகம்
- தொலைத்தொடர்பு சேவைகள்
- உணவுகளை வீட்டுக்கு கொண்டு சென்று வழங்கும் விநியோகம்
- இ-காமர்ஸ்
- வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள்
- மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்கள்
- மிகக் குறைந்த அத்தியாவசியமான பொது போக்குவரத்து
- இவற்றுக்கு பாதிப்பு இருக்காது.
அரசாங்கத்தை பொறுத்தவரை தற்போது இருக்கும் சூழலில் மக்களின் உயிரும், மக்களின் பாதுகாப்பும்தான், மிக முக்கியமானதாக கருதுகிறார்கள். நோய் பரவுவதை தடுக்க இதுபோன்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மாஹே மாவட்டமும் இந்த பட்டியலில் உள்ளது. நொய்டா, காசியாபாத், ஆக்ரா, பிரயாக், கான்பூர், வாரணாசி, பரேலி, லக்னோ, சஹரன்பூர், மீரட், லக்கிம்பூர் மற்றும் அசாம்கர் ஆகிய 15 மாவட்டங்கள் உத்தர பிரதேசத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
COMMENTS