நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் சேர்ந்து, பொதுத்துறையை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லும்...
நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் சேர்ந்து, பொதுத்துறையை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்லும் இணைந்து பாரத் இன்ஸ்டாபே (Bharat InstaPay) எனும் டிஜிட்டல் கட்டண சேவையை அறிவித்துள்ளது.
இது குறித்தான பிஎஸ்என்எல் மூத்த அதிகாரிகள் தரப்பில், இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த புதிய கட்டண சேவையானது, அதன் கூட்டாளர்களுக்கு, குறிப்பாக ப்ரீபெய்டு சேவையினை விற்பனை செய்யும் கூட்டாளர்களுக்கு உடனடியாக சேவையினை பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த பாரத் இன்ஸ்டாபே எனும் இந்த புதிய சேவையானது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூலம் இயக்கப்படுகிறது.
24*7 சேவை இது தவிர அனைத்து வகையான சேனல் பார்ட்னர்களுக்கும் 24x7 அடிப்படையில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த உதவும் என்பதையும் பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தியுள்ளது. பிஎஸ்என்எல்-ன் ஐடி தளமானது எஸ்பிஐ வங்கி தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஆக இதன் கீழ் டிஜிட்டல் பேமென்ட்களை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு பிஎஸ்என்எல் சேனல் பார்ட்னர்களும் டிஜிட்டல் ஐடி ஒன்று வழங்கப்படும். இதன் மூலம் பிஎஸ்என்எல் சேனல் கூட்டாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்ய இது உதவும்.
டிஜிட்டல் சேவை அதாவது எந்தவொரு நாளின் எந்வொரு நேரத்திலும் எந்த விதமான காகித வேலைகளும் இல்லாமல் பிஎஸ்என்எல் அலுவலகங்களுக்கு செல்லாமல் பரிவர்த்தனைகளை செய்ய இந்த டிஜிட்டல் சேவையானது உதவும். அதாவது பிஎஸ்என்எல் பாரத் இன்ஸ்டாபேவிற்கும் நிறுவனத்தின் கூட்டாளர்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இருக்காது.
இதற்கு பிஎஸ்என்எல் சேவையினை கூட்டாளர்கள் பெற பிஎஸ்என்எல் விற்பனையாளார்களை நாட வேண்டியிருந்தது. ஆனால் இனி அது இருக்காது. வேண்டிய நேரத்தில் இருந்த இடத்தில் இருந்து கொண்டே உங்களுக்கு தேவையான சேவையினை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் இது எல்லா நாட்களுக்கும் வேலை செய்யும் என்பதால் நாம் எதற்காகவும் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
மேலும் இந்த பாரத் இன்ஸ்டாபே கூட்டாளர்களின் நம்பகத் தன்மையை மேம்படுத்துவதோடு மட்டும் அல்லாமல், கூட்டாளர்களின் வணிகத்தினை விரைவான வேகத்தில் வளர்க்கவும் உதவும். தற்போது ஒரு முறை ஆன்லைன் சரிபார்ப்பு செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளார்களுக்கு தடையில்லாமல்சேவையினை வழங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
COMMENTS