தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் (TNPCB) காலியாக உள்ள உதவிப் பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, தட்டச்சர் உள்ளிட்ட 240-க்கும் மேற்பட...
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் (TNPCB) காலியாக உள்ள உதவிப் பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, தட்டச்சர் உள்ளிட்ட 240-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு சிவில், கெமிக்கல், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்
TNPCB எனப்படும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் புதிய வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காலியாக உள்ள உதவி பொறியாளர், உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 242 பணிகளுக்கு நேரடி நியமனம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
உதவி பொறியாளர்
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவிப் பொறியாளர் பணிக்கு மொத்தம் 78 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சிவில், கெமிக்கல், சுற்றுச்சூழல் பிரிவில் இன்ஜினியரிங் முடித்திருப்பதோடு சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவிப்பொறியாளர் பணிக்கு நிலை 20ன்படி, மாதம் ரூ.37,100 முதல் ரூ.1,19,500 வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் விஞ்ஞானி பணிக்கு மொத்தம் 70 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. சுற்றுச்சுழல் விஞ்ஞானி பணியிடத்திற்குப் பின்வரும் துறைகளில் ஏதேனும் ஒரு அறிவியல் துறையில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வேதியியல், உயிரியல், தாவரவியல், சுற்றுச்சுழல் வேதியியல், சுற்றுச்சுழல் அறிவியல், சுற்றுச்சுழல் டாக்ஸ்காலாஜி, நுண்ணுரியியல், மரைன் பயோலாஜி, உயிரி வேதியியல், அனாலிட்டக்கல் கெமிஸ்டரி, அப்ளைடு கெமிஸ்டரி, விலங்கியல் துறை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
உதவியாளர் (இளநிலை உதவியாளர்)
இளநிலை உதவியாளர் துறையில் மொத்தம் 38 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், கணினி படிப்பில் குறைந்தபட்சம் 6 மாதம் டிப்ளமோ மற்றும் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தட்டச்சர்
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் உள்ள தட்டச்சர் துறையில் மொத்தம் 56 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தட்டச்சர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், அரசு தட்டச்சு தொழில்நுட்ப தேர்வில் தமிழ், ஆங்கிலத்தில் மேல்நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி படிப்பில் 6 மாத காலம் டிப்ளமோ, சர்டிபிக்கேட் முடித்திருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வயது வரம்பு :-
மேற்கண்ட TNPCB Recruitment 2020 பணியிடங்களுக்கு 12.2.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சமாக 30 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும். ஆதி, ஆதி (அ), ப.வ., மி.பி.வ / சீம, பி.வ, பி.வ(மு) பிரிவினர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்கலாம். ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் இராணுவத்தினருக்கு உச்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வுக் கட்டணம்:
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), இதர வகுப்பினருக்கான தேர்வுக் கட்டணம் ரூ.500 ஆகும். ஆதி திராவிடர், ஆதி திராவிடர் (அ), மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோருக்கு ரூ.250 தேர்வுக்கட்டணம் செலுத்த வேண்டும்.
முக்கிய நாட்கள்:-
TNPCB அறிவிப்பு வெளியான நாள் : 05 மார்ச் 2020
விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் : 05 மார்ச் 2020
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26 மார்ச் 2020
கணினி அடிப்படையிலான தேர்வு நடைபெறும் தேதி : பின்னர் அறிவிக்கப்படும்
TNPCB Recruitment 2020 விண்ணப்பிக்கும் முறை
மேற்கண்ட இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpcb.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும். நேரடியாக அறிவிப்பு லிங்க்கை காண https://tnpcb2020.onlineregistrationform.org/TNPCB_DOC/Notification.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.
COMMENTS