எஸ்பிஐ கேஒய்சி ஆன்லைன்: நீங்கள் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்குகள் அல்லது பிற கணக்குகள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் உள்ளதா? எஸ்பிஐ உங்க...
எஸ்பிஐ கேஒய்சி ஆன்லைன்: நீங்கள் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்குகள் அல்லது பிற கணக்குகள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் உள்ளதா? எஸ்பிஐ உங்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை அறிவித்துள்ளது. எஸ்பிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்கள் தங்கள் KYC விபரங்களைப் பதிவிட ஆணையிட்டுள்ளது. வங்கியின் அறிவிப்புப்படி KYC அல்லாத வங்கிக் கணக்குகள் வங்கியால் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
KYC விபரங்களை புதுப்பிக்க வேண்டும்
ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி, வங்கி அனைத்து வாடிக்கையாளர்களின் KYC விபரங்களை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். அதன்படி, எஸ்பிஐ வங்கி தனது வடியைக்காளர்களின் மொபைல் எங்களுக்கு இந்த தகவலை அனுப்பிவிட்டதாகக் கூறியுள்ளது. KYC புதுப்பிப்பு கட்டாயம் என்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.
எங்கு சென்று KYC விபரங்களை புதுப்பிப்பது
அத்தகைய வங்கி அறிவிப்புகளைப் பெற்ற வாடிக்கையாளர்கள், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் அருகிலுள்ள கிளைக்குச் சென்று பின்வரும் ஆவணங்கள் / தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு எஸ்பிஐ வங்கி தனது அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. KYC புதுப்பிப்பு விபரங்களைப் பதிவிடக் கட்டாயம் உரிய நபர்கள் நேரில் வரவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
KYC விபரங்களை புதுப்பிக்க இறுதி நாள் எப்பொழுது?
எஸ்பிஐ தனது பொது அறிவிப்பில் கூறியதாவது, 28.02.20-க்கு முன்னர் அனைத்து எஸ்பிஐ பயனர்களும், தேவையான ஆவணங்களுடன் வங்கியில் தங்களின் KYC புதுப்பிப்பு விபரங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. வங்கியின் உத்தரவுப்படி 28.02.20க்கு முன்னர் KYC இணங்காத / தாமதமான கணக்குகள் முடக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறை
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி KYC, வங்கி அமைப்பின் முக்கிய பகுதியாக மாறிவிட்டது. உண்மையில், KYC விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத, வங்கிகளின் மேல் கடும் அபராதம் விதிக்க வழிவகுக்கும் என்று ரிசர்வ் வங்கி கண்டித்திருந்தது. எஸ்பிஐ வலைத்தளத்தின் அறிவிப்புப் படி, நவம்பர் 29, 2004 அன்று இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயம் KYC விதிமுறைகளைக் கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளது.
KYC புதுப்பிக்க செய்ய வேண்டியது என்ன?
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அருகிலுள்ள கிளைக்குச் சென்று பின்வரும் அடையாளத்தின் நகலையும், முகவரிச் சான்றையும், ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். KYC புதுப்பித்தல் தொடர்பான கூடுதல் சந்தேகத்திற்கு எஸ்பிஐ வங்கியின் இந்த வலைத்தளத்திற்குச் செல்லுங்கள் sbi.co.in/web/personal-banking/information-services/kyc-guidelines
KYC புதுப்பிக்க தேவையான ஆவணங்கள்
- பாஸ்போர்ட்
- வாக்காளரின் அடையாள அட்டை
- ஓட்டுனர் உரிமம்
- ஆதார் கடிதம் / அட்டை
- MNREGA அட்டை
- பான் அட்டை
- NPR இன் கடிதம்
- சமீபத்திய புகைப்படங்கள்
- தொலைப்பேசி எண்
Read more at: amil.gizbot
COMMENTS