ரேடியோ ஃப்ரீக்குவென்சி ஐடன்டிஃபிகேஷன் (RFID) என்ற தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஒரு சின்ன கோடிங் கொண்ட ஸ்டிக்கர் தான் ஃபாஸ்ட்டேக் என்பது....
ரேடியோ ஃப்ரீக்குவென்சி ஐடன்டிஃபிகேஷன் (RFID) என்ற தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய ஒரு சின்ன கோடிங் கொண்ட ஸ்டிக்கர் தான் ஃபாஸ்ட்டேக் என்பது. சுங்கச்சாவடியில் வாகனத்தில் ஒட்டப்பட்டிருக்கும் இந்த ஸ்டிக்கர் ஸ்கேன் செய்யப்படும் இந்த ஃபாஸ்ட் டேக் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.
மொபைல் ரீசார்ஜ் செய்வது போல உங்கள் ஃபாஸ்ட் டேக் கணக்கையும் நீங்கள் ரீசார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சுங்கச்சாவடியைக் கடக்கும் பொழுது இந்த ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யப்பட்டு, உங்கள் கணக்கில் உள்ள பணம் தானாகக் கழித்துக்கொள்ளப்படும். இதனால் பயணிகளின் நேரம் சேமிக்கப்படும், சுங்கச்சாவடியில் கூட்ட நெரிசலும் தவிர்க்கப்படும்.
கூகுள் பே
தற்சமயம் கூகுள் நிறுவனம் புதிய அம்சத்தை கூகுள் பே செயலியில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது பயனர்கள் பயணத்தின் போது தங்கள் ஃபாஸ்ட் டேக் கணக்குகளை ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது கூகுள் பே. ஆனால் பயனர்கள்
செய்ய வேண்டியது அவர்களின் ஃபாஸ்ட் டேக் கணக்குகளை அவர்களின் கூகுள்பே கணக்குகளுடன் இணைப்பதாகும்.
மேலும் கூகுள் பே பயன்பாட்டைப் பயன்படுத்தி ஃபாஸ்ட்டேக் கணக்கை ரீசார்ஜ் செய்யும் வழிமுறைகளைப் பார்ப்போம்.
- முதலில் உங்கள் கூகுள் பே செயலிக்குள் உள்நுழைய வேண்டும்.
- அடுத்து கூகுள்பே செயலியில் பில் கொடுப்பனவு பரிவின் கீழ் ஃபாஸ்ட்டேக் வகையை தேர்வுசெய்யவும்.
- பின்னர் உங்களது ஃபாஸ்ட்டேக்-ஐ வழங்கிய வங்கியை தேர்ந்தெடுக்கவும்
- அதன்பின்பு வரும் திரையில் உங்கள் வாகண எண்ணை உள்ளிடவும்
- அதன்பின்னர் வங்கி கணக்குடன் பணம் செலுத்துவதற்கான விருப்பத்தை தேர்வுசெய்யவும்.
குறிப்பு கூகுள் பே அம்சத்தில் இந்த ஃபாஸ்ட்டேக் கணக்குகளை ரீசார்ஜ் செய்வதைத் தவிர, ஆதரவு வங்கிகளால் வழங்கப்படும் FASTag-களுக்கான FASTagகணக்கு நிலுவைகளையும் சரிபார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more : tamil.gizbot
COMMENTS