ஹவுஸிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஹெஸ்டிஎஃப்சி) திங்கட்கிழமையன்று தாக்கல் செய்த அறிக்கையில் நான்கு மடங்கு நிகரலாபம் கண்டுள்ளதாக ...
ஹவுஸிங் டெவலப்மென்ட் பைனான்ஸ் கார்ப்பரேஷன் (ஹெஸ்டிஎஃப்சி) திங்கட்கிழமையன்று தாக்கல் செய்த அறிக்கையில் நான்கு மடங்கு நிகரலாபம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இது குறித்து பிஎஸ்இக்கு தாக்கல் செய்த அறிக்கையில், டிசம்பர் 31வுடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் நிகரலாபம் 8372.49 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இதே பந்தன் வங்கி இணைப்பு மற்றும் க்ரூ பைனான்ஸின் இணைப்பின் மூலம் இதன் மதிப்பு 9,019.81 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் இவ்வங்கி தெரிவித்துள்ளது.
அடமானக் கடன் வழங்கி வரும் இந்த நிறுவனம், 2018 டிசம்பர் காலாண்டில் 2113.80 கோடி ரூபாய் லாபத்துடனும், இதே கடந்த செப்டம்பர் காலாண்டில் 3,961.53 கோடி ரூபாயாக நிகர லாபம் ஈட்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதே ஒருங்கிணைந்த அடிப்படையில் உரிமையாளர்களுக்கு நிகரலாபம் 3,835.38 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹெஸ்டிஎஃப்சி தனது துணை நிறுவனமான க்ரூ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் 9.90 சதவிகித பங்குகளை விற்றுள்ளது. ரிசர்வ் வங்கியின் உத்தரவின் பேரில், துணை நிறுவனத்தில் வைத்திருப்பதைக் குறைக்க, பந்தன் வங்கியுடன் இணைப்பதற்காக க்ரூ ஃபைனான்ஸ் பங்கு விற்பனை செய்யப்பட்டு, பின்னர் அக்டோபர் 17 அன்று பந்தன் வங்கியுடன் இணைந்தது.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் துரித செயல்பாடுகள் காரணமாக 92% அதிகரித்து 20,285.47 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் பிஎஸ்இக்கு அளித்த ஒழுங்குமுறை தாக்கலில் தெரிவித்துள்ளது பிஎஸ்இ.
இதே நிகர வட்டி வருவாய் 13.56 சதவிகிதம் அதிகரித்து, 2,957.83 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 2,604.57 கோடி ரூபாயாக இருந்ததாகவும் ஹெஸ்டிஎஃப்சி தெரிவித்துள்ளார்.
இதே டிசம்பர் 31ன் படி, கடன் புத்தகத்தில் கடன் வழங்கும் அளவு 13 சதவிகிதம் அதிகரித்து, 4.41 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 3.89 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கியும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிறுவன பங்கின் விலை 2.37% அதிகரித்து 2452.50 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
COMMENTS