கூகிள் தனது கூகிள் மொழிபெயர்ப்பு பயன்பாட்டிற்கான அம்சத்தில் லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் எனப்படும் புதிய அம்சத்தைச் சோதனை செய்து வருகிறது. லைவ் ...
கூகிள் தனது கூகிள் மொழிபெயர்ப்பு பயன்பாட்டிற்கான அம்சத்தில் லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் எனப்படும் புதிய அம்சத்தைச் சோதனை செய்து வருகிறது. லைவ் டிரான்ஸ்கிரிப்ஷன் என்பது என்ன? அது எப்படிச் செயல்படப் போகிறது? இந்த அம்சம் எப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
கூகிள் நிறுவனம் தனது சான் பிரான்சிஸ்கோ அலுவலகத்தில் தொடர்ச்சியான செயற்கை நுண்ணறிவு டெமோக்களின் போது, இந்த அம்சத்தைச் சோதனை செய்துள்ளது என்று 'தி வெர்ஜ்' பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த புதிய அம்சத்தின் படி, பயனர்கள் ஒரு மொழியை மற்றொரு மொழியில் நிகழ் நேரத்தில் உடனே மொழிபெயர்க்க முடியும்.
நிகழ் நேரப் மொழிபெயர்ப்பு
இந்த அம்சத்தைப் பயன்படுத்த இன்டர்நெட் இணைப்பு அவசியம் தேவைப்படும் என்று கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகிள் மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்படும் எளிய மொழிபெயர்ப்பு அம்சத்தை விட, நிகழ் நேரப் பன்மொழி மொழிபெயர்ப்பில் கூடுதல் சிக்கலான சவால்கள் மிகவும் அதிகம் என்பதே, இந்த சேவை இன்னும் வெளியிடப்படவில்லை என்று கூகிள் தெரிவித்துள்ளது.
நொடியில் இவ்வளவும் செய்து முடிக்கும் AI
டிரான்ஸ்கிரிப்ஷன் அம்சம், சாதனத்தின் மைக்ரோஃபோன் வழியாக முழு வாக்கியங்களையும் முதலில் பதிவு செய்வதைத் தொடர்ந்து மதிப்பீடு செய்துகொள்ளும். அடுத்து இந்த ஆடியோவைக் AI கேட்டவுடன், நிறுத்தற்குறியை எங்குச் சேர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது மற்றும் சூழல் சொல் திருத்தம், உச்சரிப்புகள் மற்றும் கிளை மொழிகளைச் சரிசெய்தல் போன்ற பிற திருத்தங்களை நிகழ் நேரத்தில் செய்து முடிகிறது.
ஆடியோ ஃபைல்களுடன் மொழிபெயர்ப்பு உண்டா?
இந்த அம்சம் ஆடியோ ஃபைல்களுடன் இயங்காது என்றும், மைக்ரோஃபோனிலிருந்து நேரடி ஆடியோ உள்ளீடு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த அம்சத்தை வெளியிடுவதற்கான எந்தவொரு கால அறிவிப்பையும் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை, ஆனால் இது எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு கட்டத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Google I/O 2020 அறிவிப்பை வெளியிட்ட சுந்தர் பிச்சை
இதற்கிடையில், கூகிள் தனது வருடாந்திர டெவலப்பர் மாநாட்டான Google I/O 2020 நிகழ்ச்சியின் தேதியை அறிவித்துள்ளது. இந்த நிகழ்வை வரும் மே,12ம் தேதி அன்று நடத்தப்போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வரவிருக்கும் நிகழ்வு குறித்த விபரங்களை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Google I/O 2020 நிகழ்ச்சி எங்கு நடக்கிறது தெரியுமா?
கூகிள் நிறுவனத்தின் Google I/O 2020 நிகழ்ச்சி, மே 12ம் தேதி முதல் துவங்கும் என்றும், தொடர்ந்து இந்நிகழ்ச்சி மே, 14ம் தேதி வரை நடைபெறும் என்றும், கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையின் ட்வீட்-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை மவுண்டன் வியூவில் உள்ள ஷோர்லைன் ஆம்பிதியேட்டரில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more: tamil.gizbot
COMMENTS