சென்னை மற்றும் திருவள்ளூரில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இன்று காலையில் சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் தொடங்கியது. தமிழகத்தில் வ...
சென்னை மற்றும் திருவள்ளூரில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இன்று காலையில் சற்று ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் தொடங்கியது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் அடுத்த 2 தினங்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மேல் சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழை இல்லாமல் வெயில் வந்தது. பின்னர் மாலை 4 மணி வாக்கில் சென்னை, திருவள்ளூரில் கனமழை பெய்து வருகிறது. 6 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை.. கிண்டி, பல்லாவரம், தாம்பரம், முகப்பேர், அண்ணாநகர், நங்கநல்லூர், மந்தைவெளி, அடையாறு, பெரம்பூர், வில்லிவாக்கம், திநகர், மீனம்பாக்கம், சோழிங்கநல்லூர், துரைபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அது போல் திருவள்ளூரிலும் மீஞ்சூர், மணலி, மாதவரம், கொளத்தூர், பாடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் நிலவுகிறது.

COMMENTS