அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவா...
அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுக்க தீவிர கனமழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வேகமாக பலம் பெற்று வருகிறது. இது புயல் சின்னமாக மாற வாய்ப்பில்லை. ஆனால் புயல் சின்னமாக மாறினால் தமிழகத்தை தாக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை எப்படி இந்த நிலையில் சென்னையில் இப்போதைக்கு மழை விடுவதற்கு வாய்ப்பு கிடையாது. அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னையில் தீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முக்கியமாக இரவு நேரங்களில் அதிக அளவில் மழை பெய்யும். மழை என்ன மழை இப்போதைக்கு விடுவதற்கு வாய்ப்பு இல்லை என்பதால் சாலைகளில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி இருக்க வாய்ப்புள்ளது. புறநகர் சென்னை பகுதியிலும் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும். வடபழனி , அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், வள்ளுவர் கோட்டம் ஆகிய இடங்களில் மழை பெய்யும்.
செம்பரம்பாக்கம் எப்படி மேலும் சென்னையில் செம்பரம்பாக்கம் உட்பட 16 ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் சென்னையில் பணிக்கு செல்வோர் கவனமாக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்று என்ன சென்னையில் காற்று தொடர்ந்து 40 கிமீ வேகத்தில் வீச வாய்ப்புள்ளது. சென்னையில் கடல் சீற்றமாக காணப்படும். சென்னையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
COMMENTS