பழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...
பழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு நிலைமை கையை மீறி சென்று கொண்டுள்ளதால், டெல்லி மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்த டெல்லி அரசு மற்றும் மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அவை பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. எனவே டெல்லியை விட்டு வெளியேற விரும்புவதாக 40 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலமாக இந்த விஷயம் வெளியே தெரியவந்துள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை எந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதற்கு தலைநகர் டெல்லி ஒரு உதாரணம் மட்டுமே.
இந்தியாவின் பல்வேறு முன்னணி நகரங்களும் தற்போது ஏறக்குறைய இதே நிலையில்தான் உள்ளன. எனவே காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் காரணமாகதான் காற்று அதிகம் மாசடைகிறது. குறிப்பாக பழைய வாகனங்கள்தான் காற்று மாசுபாடு பிரச்னைக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளன. இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள் இன்னும் அதிகளவில் இயங்கி வருகின்றன. இந்த வகையில் பார்த்தால் 2 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் 15 ஆண்டுகளை கடந்தும் இயங்கி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது உள்ள வாகனங்களுடன் ஒப்பிடும்போது 25 மடங்கு அதிக புகையை இவை கக்கி வருகின்றன. இதன் விளைவாக காற்று மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே பழைய வாகனங்களுக்கு கடிவாளம் போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வரைவு ஸ்கிராப்பேஜ் கொள்கையை (Draft Scrappage Policy) மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
இந்த கொள்கையை வரும் நவம்பர் 15ம் தேதி மத்திய அரசு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொள்கையின்படி 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும். அதற்காக உங்களிடம் பழைய வாகனங்கள் இருந்தால், இந்த கொள்கையை கண்டு அச்சப்பட வேண்டாம்.
நன்றி டிரைவ் ஸ்பார்க் !
COMMENTS