ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் என்ற விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் வ...
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் என்ற விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இந்தியாவிற்கு சொந்தமான கார்டோசாட்-3 செயற்கைகோள் வருகிற டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி காலை 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருக்கிறது.
#ISRO #PSLV #Cartosat3— ISRO (@isro) 19 November 2019
Registrations for witnessing launch of PSLV-C47/ CARTOSAT-3 scheduled on 25.11.2019 at 0928 hrs IST from Launch View Gallery, SHAR Sriharikota will open from 20.11.2019 at 0800 hrs IST.
Click here for registration- https://t.co/3CbfTbkaOp pic.twitter.com/K0CkPcWU1b
விண்ணில் பாயும் 74-வது ராக்கெட்
மேலும் இந்த ராக்கெட்டில் வணிக ஏற்பாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்காவைச் சேர்ந்த 13 நானோ வகை செயற்கைகோளும் அனுப்பப்பட உள்ளது. பி.எஸ்.எல்.வி.சி-47 ராக்கெட்டானது எக்ஸ் எல் வகையின் 21 ஆவது ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பாயும் 74 ஆவது ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது.
கார்ட்டோசாட்-2 அனுப்பிய தேதி
இஸ்ரோ முன்னதாகவே கார்டோசாட் 2 செயற்கைகோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து கடந்த 2017 ஆம் வருடம் ஜூன் 23 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.
மிக துல்லியமாக படம் பிடிக்கப்படும்
இந்த செயற்கை கோளானது 509 கிலோமீட்டர் உயர சுற்றுவட்டப் பாதையில் 97.5 டிகிரி சாய்வில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த கார்ட்டோசாட்-3 பூமியையும், பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மிக துல்லியமாக படம் பிடித்து அனுப்பும். இதன்மூலம் எதிரிகளின் ராணுவ நிலைகள், பதுங்கு குழிகள், தீவிரவாதிகள் பதுங்கும் இடங்கள், ஆயுதக்கிடங்கு உள்ளிட்டவைகள் துல்லியமாக கண்டறியமுடியும்.
இஸ்ரோ சாதனைகள்
இஸ்ரோ வரலாற்றில் ஒரே ஆண்டில் ராணுவ பயன்பாட்டிற்கு 3 செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவுவது இதுவே முதன்முறை ஆகும். டிசம்பரில் செலுத்தப்பட உள்ள ரிசாட் வரிசை செயற்கைகோளுடன் ஜப்பான், லக்சம்பர்க் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கலின் 10 செயற்கைகோள்களும் செலுத்தப்பட உள்ளன. டிசம்பர் 25 ஆம் விண்ணில் செலுத்தவுள்ள கார்ட்டோசாட்-3 செயற்கைகோளுக்கான கவுண்ட்டவுன் வரும் 23 ஆம் தேதி தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
COMMENTS