பெங்களூர்: தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட், செலவினங்களைக் குறைப்பதற்காக நடுத்தர மற்றும் மூத்த மட்டங்களில் உள்ள ஆயிரக்கணக...
பெங்களூர்: தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லிமிடெட், செலவினங்களைக் குறைப்பதற்காக நடுத்தர மற்றும் மூத்த மட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இன்போசிஸ் நிறுவனத்தில், தற்போது ஜே.எல் 6, ஜே.எல் 7 மற்றும் ஜே.எல் 8 டீம்களில் 30,092 ஊழியர்கள் உள்ளனர். இதில், சுமார், 2,200 பேர், பணிகளை இழக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அசோசியேட் (ஜே.எல் 3 மற்றும் அதற்குக் கீழே) மற்றும் நடுத்தர (ஜே.எல் 4 மற்றும் 5) மட்டங்களில் 10,000 ஊழியர்கள் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது அந்த டீம்களில் 2-5% ஊழியர்களாகும்.
மேலும், உதவி துணைத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், மூத்த துணைத் தலைவர்கள் மற்றும் நிர்வாக துணைத் தலைவர்கள் ஆகிய பதவிகளில் பணியாற்றும் 971 மூத்த நிர்வாகிகளில் 2 முதல் 5% பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், இதன் விளைவாக இதுபோன்ற 50 நிர்வாகிகளுக்கு வேலை இழப்பு ஏற்படும் என்றும் முன்னணி ஆங்கில நாளிதழில் செய்தி வெளியிட்டது.
இந்த செய்தி நாளிதழில் வெளிவந்ததையடுத்து, இன்று, இன்ஃபோசிஸ் பங்குகள் 2.5% அளவுக்கு குறைந்துவிட்டன. கடந்த வாரம், காக்னிசண்ட் அதன் முக்கிய ஊழியர்களில் 7,000 பேரை 2020 நடுப்பகுதியில் நிறுவனத்திலிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொண்டுள்ளதாக, தகவல்கள் வெளிவந்தன. அதே நேரத்தில் காக்னிசண்ட் நிறுவனம் அதன் கன்டன்ட் மாடரேட் தொழிலை கைவிடுவதால், அங்கிருந்து மேலும் 6,000 ஊழியர்கள் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளதாம்.
COMMENTS