- 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை சென்னை: அரபிக் கடலில் கியார் புயலைத் தொடர்ந்து புதியதாக மகா புயல் உருவாகி உள்ளத...
- 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
சென்னை: அரபிக் கடலில் கியார் புயலைத் தொடர்ந்து புதியதாக மகா புயல் உருவாகி உள்ளது. இதனையடுத்து 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடலில் ஏற்கனவே கியார் புயல் உருவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து மகா என்ற மற்றொரு புயலும் மையம் கொண்டிருக்கிறது.
திருவனந்தபுரம் அருகே மையம் கொண்டிருக்கும் இப்புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. லட்சத்தீவு பகுதியில் இருந்து 25 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்கிறது. இது தீவிர புயலாக த்து லட்சத் தீவுகளை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மகா புயல் தீவிரமடையும் போது மணிக்கு 65 கி.மீ முதல் 85 கி.மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இப்புயலால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரி, நெல்லை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/cyclone-maha-to-cross-lakshadweep-367003.html
COMMENTS