தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு உட்பட்ட ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடங்க...
தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு உட்பட்ட ஆயுர்வேதா, சித்தா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய ஆயுஷ் குழுமம் (AYUSH)
பணிகள் : சித்த மருத்துவ ஆலோசகர், ஆயுர்வேதா மருத்துவ ஆலோசகர், யுனானி மருத்துவ ஆலோசகர், ஓமியோபதி மருத்துவ ஆலோசகர்
காலிப் பணியிட விபரம்:- சித்த மருத்துவ ஆலோசகர் - 32 ஆயுர்வேதா மருத்துவ ஆலோசகர் -03 யுனானி மருத்துவ ஆலோசகர் - 01 ஓமியோபதி மருத்துவ ஆலோசகர் - 02
கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் பணிகளுக்கு ஏற்ற துறையில் குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது டிகிரி முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவ தேர்வு வாரியம், தமிழ்நாடு ஓமியோபதி மெடிக்கல் கவுன்சில் ஆகியவற்றில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 1.7.2019 தேதியின்படி 18 57 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : இப்பணியிடங்களுக்குத் தேசிய ஆயுஷ் குழு திட்டத்தின் கீழ் ஊதியம் நிர்ணயிக்கப்படும். சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.1000 ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு முறை : கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnhealth.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து அக்டோபர் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
COMMENTS