மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் பணியாளர்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள...
மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் பணியாளர்களுக்கான அறிவிப்பை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது. கிரேடு "சி" மற்றும் "டி" பகுதிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், சுருக்கெழுத்தாளர் கிரேடு "சி" யில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பினரும் விண்ணப்பிக்கலாம். சுருக்கெழுத்தாளர் "டி" பிரிவு ராணுவம் தொடர்பான பணி என்பால், ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தமிழகத்தில் மத்திய அரசு வேலை- அழைக்கும் எஸ்எஸ்சி! நிர்வாகம் : மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) பணி : சுருக்கெழுத்தாளர் கிரேடு சி மற்றும் டி கல்வித் தகுதி : 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : கிரேடு "சி" பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். கிரேடு "டி" பணிக்கு 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்கள், ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :- விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, புதுச்சேரி ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது.
விண்ணப்பக் கட்டணம் : இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு விபரம் : 2020 மே 5ம் தேதி முதல் 7ம் தேதி வரையில் இதற்கான தேர்வுகள் நடைபெறும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 2 மணி நேரம் தேர்வு நடைபெறும். தவறான ஒவ்வொரு வினாக்களுக்கும் 0.25 நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய நாட்கள் : விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 20ம் தேதி முதல் அக்டோபர் 18ம் தேதி வரையில் ஆன்லைன் வழி விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான தேதி அக்டோபர் 18 வங்கி செலான் வழியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி அக்டோர் 22 தேர்வுகள் 2020 மே 5ம் தேதி முதல் 7ம் தேதி வரையில் நடைபெறும் இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு இங்கே கிளிக் செய்யவும்.
COMMENTS